January 19, 2017
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு போராட்டம்.. சிங்கப்பூரை சிலிர்க்க வைத்த தமிழர்கள்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்கள் செம்பவாங் என்னுமிடத்தில் போராட்டம் நடத்தினர்.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் விதித்த தடை நீக்கப்படவில்லை. இதனால் ஜல்லிக்கட்டை நடத்த அவசர சட்டம் கொண்டுவரக் கோரி தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் என பல்லாயிரக்கணக்கானோர் தீவிர போராட்டத்தில் குதித்து உள்ளனர்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து சிங்கப்பூரில் செம்பவாங் நகரில் வசிக்கும் தமிழர்கள் புதன்கிழமை போராட்டம் நடத்தினர். மேலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக துண்டு பிரசுரங்களை வழங்கினர். தமிழர்கள் அதிகம் வசிக்கும் லிட்டில் இந்தியாவில் ஜன.24-ம் தேதி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்கள் தமிழகத்தை தாண்டி லண்டன், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, உள்ளிட்ட நாடுகளிலும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு போராட்டம்.. சிங்கப்பூரை சிலிர்க்க வைத்த தமிழர்கள்
Reviewed by மறத்தமிழன்
on
January 19, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
January 19, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.