Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 21, 2017

மோடியின் "சீறிய" முயற்சியால் அவசர சட்டமாம்... நெட்டிசன்களிடம் வாங்கி கட்டும் தமிழக பாஜக!


மோடியின் "சீறிய" முயற்சியால் ஜல்லிக்கட்டு அவசர சட்டம் இயற்றப்பட்டதாக கூறி நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக் கொண்டிருக்கிறது தமிழக பாஜக

ஜல்லிக்கட்டு நடத்த பிறப்பிக்கப்பட்ட அவரச சட்டத்தை மக்கள் நிராகரித்து வருகின்றனர்; ஆனால் தமிழக பாரதிய ஜனதாவோ உடனே 'மோடியின் சீரிய முயற்சியாலும்' அவசர சட்டம் இயற்றியதற்கு நன்றி என ட்விட்டரில் பதிவிட இப்போது நெட்டிசன்களிடம் வறுபட்டுக் கொண்டிருக்கிறது.
ஜல்லிக்கட்டுக்கான ஒரு வார காலமாக பல லட்சம் மாணவர்களும் இளைஞர்களும் போராடி வருகின்றனர். இந்த போராட்ட பெருநெருப்பை தணிக்கும் வகையில் அவசர சட்டம் ஒன்றை தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் நாளை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் போர்க்களத்தில் இருக்கும் மக்களோ இதை நிராகரித்துவிட்டனர்.
இந்த நிலையில் தமிழக பாரதிய ஜனதா கட்சி தம்முடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், தமிழக மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் அறவழிப் போராட்டத்தாலும் பாரத பிரதமர் அவர்களின் "சீறிய" முயற்சியால் (சீரிய என்பதே சரி) ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்றியதற்கு நன்றி! நன்றி! என பதிவிடப்பட்டுள்ளது.
இப்படி ஒரு ட்விட்டர் பதிவு போடப்பட்டதுதான் தாமதம்! நெட்டிசன்கள் பொங்கி எழுந்து பாஜகவை என்னென்ன வார்த்தைகளால் விமர்சிக்க முடியுமோ அப்படியெல்லாம் வறுத்து கருகவிடுகின்றனர்!!


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.