Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 31, 2017

பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் கடைகளுக்கு சீல்.. கலெக்டர் எச்சரிக்கை


ஈரோடு மாவட்ட கடைகளில் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதாக பல்வேறு தரப்பினர் மாவட்ட கலெக்டர் பிரபாகருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
இந்த நிலையில், ஈரோட்டில் வங்கி பரிவர்த்தனை தொடர்பாக வங்கியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் கலந்து கொண்ட கலெக்டர் பிரபாகர் கூறும்போது,
ஈரோடு மாவட்ட கடைகளில் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. ஏற்கனவே 10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என ரிசர்வ் வங்கி மற்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளன.
எனவே இனிமேல் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதன்படி கடைகளுக்கு உரிமம் இல்லாமல் இருந்தால் சீல் வைக்கப்படும். உரிமம் இருந்தால் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.