Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 4, 2017

ரத்தத்தின் ரத்தமான அன்பு உடன் பிறப்புகளே! தவிர்த்தார் சசிகலா!



சசிகலா, அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக உருமாற்றிக்கொண்டதை சிலர் ஆதரிக்க, பலர் எதிர்த்து வருகிறார்கள்.
அவர் அ.தி.மு.க.தலைமை கழக மேடையில் தனது முதல் பேச்சை பிரிண்டட் மேட்டர் தயவில் அரங்கேற்றினார். அதுல,  ரத்தத்தின் ரத்தமான என்கிற மந்திர ஸ்லோகம் தவிர்க்கப்பட்டிருந்தது.
தி.மு.க.வில் இருந்து வெளியேறி அ.தி.மு.க.வை நிறுவிய எம்.ஜி.ஆர். அவர்கள், முதல் அரசியல் மேடையில் என் ரத்தத்தின் ரத்தமான அன்பு உடன் பிறப்புக்களே என்று தான் அவரது உரையை துவக்கினார்.
இதற்கு தொண்டர்கள் மத்தியில் ஆரவார வரவேற்பு கிடைத்தது. எம்.ஜி.ஆரின் இறுதி மேடை வரை ரத்தத்தின் ரத்தமான அன்பு உடன் பிறப்புக்களே என்கிற மந்திர ஸ்லோகத்தை அவர் கைவிடவேயில்லை.
எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின்னர் ஜெயலலிதா பேசும் அரசியல் மேடைகளில் என்னை வாழவைக்கும் தெய்வங்களாகிய தாய்மார்களே, இதய தெய்வம் புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தமான என் உயிரினும் மேலான எனதருமை கழக உடன்பிறப்புகளே என்று தான் தனது பேச்சை துவக்குவார்.
எம்.ஜி.ஆர்.கண்ட ஸ்லோகத்தை ஜெவும் கைவிடவில்லை,  ரத்தத்தின் ரத்தமான என்கிற மந்திர ஸ்லோகம் கட்சியையும்    ஆட்சியையும் கைவிட்டதேயில்லை.
அப்படிப்பட்ட மந்திர ஸ்லோகத்தை சசிகலா தவிர்த்து விட்டார்.
கடந்த 31 ஆம் தேதியன்று அ.தி.மு.க.தலைமை கழக மேடையில் தனது முதல் மேடை பேச்சை துவக்கிய சசிகலா, ஜெயலலிதா பின்பற்றி வந்த எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தமான என்கிற மந்திர ஸ்லோகத்தை புறம்தள்ளிவிட்டார்.
இது திட்டமிட்டு தவிர்க்கப்பட்ட ஒன்றாகும். அ.தி.மு.க.பாரம்பரியத்தில் 46 ஆண்டுகள் இரண்டற கலந்துவிட்ட வழக்கத்தை சசிகலா தன் குடும்பத்துக்கு ஏற்றபடி மாற்றி அமைத்துக்கொண்டார். எங்கே போய் முடிய போகுதோ?
ராங் அட்வைஸ்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.