January 3, 2017
பாசிசத்திற்கெதிராக கைகோர்த்த நெஞ்சுரமும், பத்திரிக்கை தர்மமும் . . .
இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை நிர்வாகத்தால் பத்திரிக்கையாளர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ராம்நாத் கோயங்கா விருதினை பிரதமர் மோடி கையால் வாங்க மறுத்தார் ’கீதை பதிப்பகமும், ஹிந்து இந்தியா உருவாக்கமும்’ என்ற புத்தகத்தினை எழுதிய பத்திரிக்கையளர் அக்சயா முகுல். விருது வழங்கும் விழாவினை அவர் புறக்கணித்தது தொடர்பாக தொலைக்காட்சிப் பத்திரிக்கையாளர் சந்தீப் பூஷன் கேரவான் இதழில் பின்வருமாறு எழுதியுள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் நிறுவனரது பெயரில் பத்திரிக்கைத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்காக வழங்கப்படும் ராம்நாத் கோயங்கா விருது வழங்கும் விழா பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 2016 நவம்பர் 2ஆம் நாள் நடைபெற்றது. விருது பெறுபவர்களில் ஒருவரான டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையின் மூத்த பத்திரிக்கையாளரான அக்சயா முகுல் அந்த விருதினைப் பெற வராமல் விழாவினைப் புறக்கணித்தார். அவரது புத்தகத்தினை வெளியிட்ட ஹார்ப்பர் கோலின்ஸ் இந்தியா பதிப்பகத்தின் பதிப்பாளரும், தலைமை ஆசிரியருமான கிரிஷண் சோப்ரா அவருக்குப் பதிலாக அந்த விருதினைப் பெற்றுக் கொண்டார்.
பிரதமர் மேற்கொண்டிருக்கும் அரசியலுக்கு அச்சாணியாகத் திகழும் ஹிந்துத்துவாக் கொள்கைகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் தனது புத்தகத்தை எழுதியுள்ள ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகின்ற முகுல், ராம்நாத் கோயங்கா விருதினைப் பெறுவதற்குத் தான் பெருமைப்படுவதாகவும், அந்த விருதினைப் பெறுவதில் தனக்கு எவ்வித உறுத்தலும் இல்லை என்றும் கூறினார். ஆனாலும் பிரதமரிடமிருந்து தனக்கான அந்த விருதினைப் பெற்றுக் கொள்வதில் தனக்குப் பிரச்சனை உள்ளதாகவும், விருதினை வாங்கும் போது அதனைப் பெற்றுக் கொண்டு புகைப்படத்திற்காக அவரோடு சேர்ந்து சிரித்துக் கொண்டு நிற்பதை தன்னால் நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை என்றும் கூறினார் முகுல்.
விருது வழங்கும் விழாவிற்கு மோடியை அழைப்பது என்ற இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை நிர்வாகத்தின் முடிவானது அங்கு பணிபுரியும் சில மூத்த ஆசிரியர்களுக்கும் கூட உகந்ததாக இருக்கவில்லை. பிரதமரால், குறிப்பாக மோடியைப் போன்ற ஒருவரால் விருதுகள் அவசியம் வழங்கப்பட வேண்டுமா என்ற கேள்விகளை ஆசிரியர் குழுவிலிருந்த சிலர் எழுப்பியதாகத் தெரிகிறது.
விருது வழங்குவதற்காக மோடியை அழைத்ததில் ஆசிரியர்கள் குழுவிற்கு எவ்விதச் சம்பந்தமும் இல்லை என்ற பதிலை அளித்த பத்திரிக்கையின் முதன்மை ஆசிரியரான ராஜ்கமல்ஜா, விருது வழங்குவதை நிர்வகிக்கும் ராம்நாத் கோயங்கா நிறுவனத்தின் வைதேகி தகாரிடம் இது குறித்து கேட்டுக் கொள்ளுமாறும் கூறினார்.
தொடர்ந்து ஊடகங்களுக்கு எதிரான கொள்கையைக் கொண்டிருப்பவரும்,நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஊடகங்களை அவமதிக்கின்றவருமான மோடியை விழாவிற்கு அழைத்ததன் காரணத்தை விளக்குமாறு தகாருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பிய போது, இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை எப்போதும் நேர்மையுடன் நடந்து கொள்வதாகவும், பிரதமரின் வருகையின் மூலம் அரசாங்கம் அல்லது அரசியல் குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் எழுதுவது பாதிக்கப்படும் என்று கருதத் தேவையில்லை என்றும் கூறிய தகார், 2006ஆம் ஆண்டு நடைபெற்ற விழாவில் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் உள்பட பல அரசியல்வாதிகள் கலந்து கொண்டு சிறப்பித்திருப்பதாகவும் பதில் அளித்தார்.
மோடியின் தலைமையின் கீழ் இந்தியா என்பது முற்றிலும் மன்மோகன்சிங்கின் தலைமையின் கீழ் இந்தியா என்பதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. அரசாங்கத்தின் தவறுகளைச் சுட்டிக்காட்டத் தயங்குகின்ற வகையில், ஊடகங்களின் மீது மோடி, அமித்ஷா ஆகியோரது தலைமையில் பாரதிய ஜனதா கட்சி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தலித்துகள், பிற பிற்பட்ட வகுப்பினர் ஆகியோரை நம் பக்கம் இழுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று டெல்லியில் நடைபெற்ற ரகசியக் கூட்டத்தில் மோடி பாரதிய ஜனதா கட்சியினரைக் கேட்டுக் கொண்டதாக 2016 ஆகஸ்டில் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் செய்தியொன்று வெளியானது.
அந்தச் செய்தியினை மறுத்து பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகச் செயலாளரான மகேந்தர் பாண்டே வெளியிட்ட இரண்டு பக்க அறிக்கையில், காங்கிரஸ், கேஜரிவால் ஆகியோரின் உள்ளீடற்ற கருத்துக்களைப் பின்பற்றுவதன் விளைவாகவே இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையானது இத்தகைய களங்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், படைப்பாற்றல் மிக்க இதழியல் நடைமுறைகளை செய்தித்தாள்கள் கடைப்பிடிக்க வேண்டுமே தவிர, அரசினை இழிவுபடுத்தும் வகையில் புனைவுக்கதைகளை எழுதி எதிர்மறையான கருத்துக்களை வெளியிடக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. நாட்டிலுள்ள அனைத்துப் பத்திரிகைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்ட அந்த அறிக்கையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையானது மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையும் சேர்த்தே வைக்கப்பட்டிருந்தது.
மோடிக்கெதிரான குரல்களை முன்னெடுத்துச் செல்லும் ஆங்கில ஊடகங்களுக்கு எதிராக விடப்பட்ட செய்தியாகவே அந்த அறிக்கை அமைந்திருந்தது. இந்தியன் எக்ஸ்பிரஸுக்கும், மோடிக்கும் இடையே உள்ள அடிப்படை முரணானது பேச்சு சுதந்திரம் குறித்த அவர்களது நிலைப்பாட்டைப் பொறுத்ததாய் இருக்கிறது. இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளாக மே 2014இலிருந்து உத்தரப்பிரதேசம், பீகாரில் நடைபெற்று வரும் வகுப்புவாதக் கலவரங்கள், பனாமா பேப்பர்கள் குறித்து நடத்திய புலனாய்வு, 2013இலிருந்து 2015 வரையிலும் ஒரு லட்சம் கோடிக்கு மேலான கடன்களைத் தள்ளுபடி செய்த வங்கிகளின் நடவடிக்கைகள் போன்று பல்வேறு செய்திகளை வெளியிட்டிருந்தது ( இருந்த போதிலும் 2016 செப்டம்பர் 18 அன்று நடைபெற்ற ஊரி தாக்குதல்கள், அதன் தொடர்ச்சியாக 2016 செப்டம்பர் 28 இரவில் இந்திய ராணுவத்தால் நடத்தப்பட்ட துல்லிய தாக்குதல் ஆகியவை பற்றி அரசாங்கத்தின் குரலாக வெளியிடப்பட்ட செய்திகள் புருவத்தை உயர்த்த வைத்ததோடு பல்வேறு கண்டனங்களையும் பெற்றுத் தந்தது ).
“ஆனால் மோடியைப் பொறுத்த வரையில், தனது கையசைவில் ஊடகங்கள் இயங்குவதாக ஏளனம் செய்து அவற
பாசிசத்திற்கெதிராக கைகோர்த்த நெஞ்சுரமும், பத்திரிக்கை தர்மமும் . . .
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 03, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 03, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.