January 18, 2017
தமிழர்களால் ஜல்லிக்கட்டு நடத்த முடியாது : சவால் விடும் பீட்டா பெண் அதிகாரி
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க கோரியும், காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்க கோரியும், தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதனைதொடர்ந்து நேற்று முதல் சென்னை மெரினா கடற்கரை, மதுரை அலங்காநல்லூர் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பீட்டா அமைப்பு செயல் அதிகாரியான பூர்வா ஜோஷிபுரா, தமிழர்களால் ஜல்லிக்கட்டு நடத்த முடியாது என்று இந்தியா டுடே பத்திரிக்கைக்கு பேட்டியளித்துள்ளார்.
அந்த பேட்டியில், பீட்டா உலகம் முழுவதும் உள்ள ஒரு அமைப்பு. தமிழர்களால் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் போராட முடியாது. இது தமிழ்நாட்டிற்கும், தமிழ் மக்களுக்கும் நான் வெளிப்படையாக விடும் சவால் என்று கொக்கரித்துள்ளார்.
இதனால் தமிழகத்தில் இளைஞர்கள் மட்டுமல்லாது தமிழ் ஆர்வலர்கள் உட்பட தமிழர்கள் கொதித்துப்போய் உள்ளனர்.
தமிழர்களால் ஜல்லிக்கட்டு நடத்த முடியாது : சவால் விடும் பீட்டா பெண் அதிகாரி
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 18, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 18, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.