Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 8, 2017

தலித் இளைஞரை உயிரோடு எரித்து கொன்ற சாதி வெறியர்கள்!


விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அடுத்து பெரியபாபுசமுத்திரம் பகுதியை சேர்ந்த சக்திவேல் மகன் சதீஷ் வயது 23, இவர் சுமைதூக்கும் தொழில் செய்துவருகிறார். கடந்த 01.01.17 அன்று புத்தாண்டு தினகொண்டாட்டத்தில் பெரியபாபு சமூத்திரம்த்திரம் தலித் இளைஞர்களும் பக்கத்து ஊரைச்சேர்ந்த வன்னியர் இளைஞர்களும்
பிரச்சனையாகி கைகலப்பாகிவிட்டது உனடியாக கண்டமங்கலம் காவல்நிலைய போலீசார் தலையிட்டு இருதரப்பினரையும் விரட்டிவிட்டதாக சொல்லப்படுகிறது. இதற்கடுத்து 04.01.17 அன்று இரவு சுமார் 10 மணியளவில் சதீஷ் என்பவர் செல்போனில் பேசியபடி பக்கத்தில் பெரியபாபுசமுத்திரம் ஏரிக்கரை பக்கம் சென்றுள்ளார்.

அப்போது அவரை சிலர் அவர் முகத்தை துனியால் மூடி கட்டிவைத்து அடித்து அவரை தீவைத்து கொளுத்திவிட்டு தப்பிவிட்டனர். அவர் அலறிக்கொண்டு ஓடிவந்து பக்கத்து வீட்டில் வந்து விழுந்துவிட்டார் அவரை உடனடியாக அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பிறகு புதுவை ஜிப்மர் மருத்துமனை அவசரப்பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்துவிட்டார்.



இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைதுசெய்ய வலியுறுத்தி நேற்று காலை 10.30 மணியளவில் கண்டங்கலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆற்றலரசு தலைமையில் சாலைமறியல் செய்தனர். அவர்களை கைதுசெய்து மண்டபத்தில் வைத்து இருந்து மாலைவிடுவித்தனர்.

பெரியார் அம்பேத்கர் வாசகர் ட்ட தோழர்களும் பாதிக்கப்பட்ட அந்த பகுதி மக்களுக்கு ஆதரவாக இருந்து வருகின்றனர்.

சாதிவெறியின் உச்சம் நின்றபாடில்லை
சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்றால் கொலை செய்தவன் தூக்கில் தொங்கப்பட வேண்டும்.

உயிரோடு எரித்துக் கொன்ற ஜாதிவெறிபிடித்த குற்றவாளிகளை உடனடியாக கைதுசெய்யவேண்டும்.

அப்பகுதி தலித்மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.