சென்னை: மெரினாவில் கடந்த 23ஆம் தேதி போலீசார் வீடுபுகுந்து நடத்திய தடியடி தாக்குதலில் ரயில்வே டிடிஆர் ஒருவரின் கை எலும்பு முறிந்துள்ளது. போராட்டத்தில் பங்கேற்காத தன்னை போலீசார் கடுமையாக தாக்கியதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்காக அறவழிப் போராட்டம் நடத்தியவர்களை கடந்த 23 ஆம் தேதி காலை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். அப்போது சிலர் போலீசார் மீது கற்களை வீசினர்.
போலீசாரும் பதிலுக்கு கற்களை வீசினர். இதில் ஏராளமானோர் காயமடைந்தனர். இந்த வன்முறையில் சென்னை நடுக்குப்பம் மற்றும் திருவல்லிக்கேணி பகுதியில் ஏராளமான வாகனங்கள் மற்றும் குடிசைகள் தீக்கிரையாயின.
காவல்துறை நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் பலர் காயமடைந்தனர். இந்நிலையில் வன்முறையின் போது திருவல்லிக்கேணி பகுதியில் வீடு ஒன்றில் நுழைந்த போராட்டக்காரர்களை காவல்துறையினர் அடித்து உதைத்து கைது செய்தனர். அப்போது அந்த வீட்டில் இருந்த ரயில்வே டிடிஆர் பிரேம்நாத்தையும் போலீசார் தாக்கியுள்ளனர்.
அவரும் அவரது பெற்றோரும் எத்தனையோ முறை போராட்டத்தில் பங்கேற்வில்லை, பணிமுடிந்து இப்போதுதான் வீடு திரும்பினேன் என்று கூறியும் அதனை அறவே கேட்காத காவல்துறையினர் அவரை இழுத்துச்சென்று சரமாரியாக தாக்கினர். இதில் அவரது கை எலும்பு முறிந்தது.
மூன்று நாட்கள் சிறையில் இருந்த அவர் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ளார். கை எலும்பு முறிந்துள்ளதால் பழையபடி நீச்சல் போட்டிகளில் பங்கேற்க முடியாது என்றும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
மேலும் தன்மீது வன்முறை வழக்குப் பதியப்பட்டதால் ரயில்வே நிர்வாகம் தன் மீது என்ன நடவடிக்கை எடுக்குமோ? தனது எதிர்காலம் என்னவாகுமோ என பீதியடைந்துள்ளார்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.