Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 12, 2017

வயதில் மூத்த பெண்கள் மீது ஆண்களுக்கு ஏன் மோகம் ஏற்படுகிறது? அதற்கு என்ன காரணம் தெரியுமா?



தற்போது உள்ள தலைமுறையில் வயது வித்தியாசம் இன்றி காதல் பூத்து குலுங்குகிறது.

ஆனால் சமீப காலத்திற்கு முன்பு வரையிலும் திருமணம் செய்யும் போது குறைந்தபட்சம் ஆறு வயது வித்தியாசம் உள்ள பெண்ணை பார்த்து திருமணம் செய்வதற்கு ஒத்துக் கொள்வார்கள்.

இந்த பழக்க வழக்கங்கள் இன்றைய காலத்தில் தலைக் கீழாக மாறி இருக்கிறது.

ஏனெனில் கலாச்சார கலப்பு, இருவரும் வேலைக்கு செல்லும் முறை, வயது வித்தியாசம் பாராத பழக்கவழக்கங்கள் இது போன்ற நமது வாழ்க்கை முறை மாற்றத்தினால் ஆண்கள் வயது மூத்த பெண்களையும், பெண்கள் வயது குறைந்த ஆண்களையும் விரும்பி, திருமணம் செய்துக் கொள்ள காரணமாக இருக்கிறது.

ஆண்களுக்கு மூத்த பெண்கள் மீது மோகம் ஏற்படுவதற்கான காரணங்கள்

பெண்களின் அழகு என்பது அவர்களின் பதின் வயதுகளில் இருந்து இருபதுகளின் ஆரம்பத்தின் வரை இருக்கும். எனவே ஆண்களுக்கு அவர்களை விட வயது மூத்த பெண்கள் மீது ஆசை அல்லது மோகம் ஏற்பட அழகு ஒரு முக்கிய காரணமாக உள்ளது.
ஆண்களுக்கு எதிராக இருக்கும் பெண்களின் கருத்துக்கள், நச்சரிப்புகள், தெளிவான பேச்சுக்கள் இவை அனைத்தையும் மிக எளிதில் புரிந்துக்கொள்ளும் மனோபாவம் வயது அதிகமான பெண்களிடம் இருக்கிறது என்று கருதி சில ஆண்கள் அவர்கள் மீது மோகமாக இருப்பார்கள்.
பொதுவாக ஆண்களை விட பெண்கள் தான் அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள். இதிலும், முதிர்ச்சியான பெண்ணிடம் புரிதலோடு கலந்த அக்கறை இருப்பது, தங்களை மேம்படுத்திக் கொள்ளவும், புத்துணர்ச்சி அடையவும் செய்கிறது என்று ஆண்கள் கருதுகிறார்கள்.
வீடு மற்றும் நாடு ஆகிய இரண்டு இடத்திலும் ஆண்கள் தான் தலைமை வகிக்க வேண்டும் என்ற எண்ணம் இந்த தலைமுறை ஆண்களிடம் இல்லை. எனவே திருமணம் செய்யும் பெண் ஒரு முதிர்ச்சியான பெண்ணாக இருந்தால், அவர்கள் வீட்டை நல்லபடியாக பார்த்துக் கொள்வார்கள் என்று எண்ணம் ஆண்கள் மத்தியில் இருக்கிறது.
வாழ்நாட்களின் போது ஏதோ ஒரு தவறுகள் செய்திருந்தால், அதை வயதில் மூத்த பெண்கள் பெண்கள் ஏற்றுக் கொள்ளும் மன பக்குவம் கொண்டிருப்பார்கள். மேலும் அவர்கள் ஈகோ எனும் அகம்பாவத்தைக் கொண்டிருக்க மாட்டார்கள். இதனால் கூட ஆண்கள் தன்னை விட வயது அதிகம் உள்ள பெண் மீது ஆசை கொள்ள காரணமாக உள்ளது.
வாழ்க்கையின் அனுபவங்கள், ஒரு செயலில் எதிர்கொள்ள வேண்டிய சூழல்கள், முக்கிய நிகழ்வுகள் இது குறித்த அனுபவ ஆற்றல் அவர்களிடம் இருப்பதால், தன்னை விட வயது மூத்த பெண்கள் மீது சில ஆண்கள் மோகம் கொள்கிறார்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.