January 4, 2017
வங்கி, ஏடிஎம்களில் தொடரும் தட்டுப்பாடு பொங்கல் பண்டிகைக்கு பணம் எடுக்க இப்போதே வரிசையில் நிற்கும் நிலை
வங்கி மற்றும் ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு தொடர்ந்து நீடிப்பதால் சம்பள பணத்தை எடுக்க வங்கி மற்றும் ஏடிஎம் முன் மக்கள் வரிசையில் கால் கடுக்க காத்திருக்கின்றனர். பொங்கல் பண்டிகை செலவுக்கு பணம் எடுக்க இப்போதே வரிசையில் நிற்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மக்களிடையே புழக்கத்தில் இருந்த ரூ. 500, 1000 நோட்டுகளை கடந்த நவம்பர் 8 ம் தேதி இரவு திடீரென பிரதமர் மோடி தடை செய்து அறிவித்தார். புதிய ரூ. 500, 2000 நோட்டுகளை அறிமுகப்படுத்தினார். பழைய நோட்டுகளை மாற்றவும் புதிய நோட்டு எடுக்கவும் வங்கிகளில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். இந்த நிலை 50 நாளில் சரியாகும் என்று பிரதமர் கூறினார். ஆனால் 50 நாட்களை கடந்த பின்பும் இப்போதும் வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு தொடர்கிறது. இதனால் மக்கள் இன்னமும் பணம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
வாரம் ஒருவர் ரூ. 24 ஆயிரம் எடுக்கலாம் என்ற அறிவிப்பிற்கு மாறாக இன்னும் சில வங்கிகளில் ரூ. 4000, ஒரு சில வங்கிகளில் ரூ. 8000 மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றது. ஏடிஎம்களில் ஜனவரி 1 முதல் ரூ. 4500 எடுத்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இருந்தும் இயங்கும் ஒரு சில ஏடிஎம்களில் ரூ. 4000 மட்டுமே அதுவும் புதிய 2000 நோட்டுகளாக வருகின்றது. சில்லரைக்காக மக்கள் தவிக்கின்றனர். 90 சதவித ஏடிஎம்கள் இயங்க வில்லை, நோட்டு தடை செய்யப்பட்ட அன்று மூடப்பட்ட ஏடிஎம்கள் இன்னும் திறக்கப்படவில்லை.
அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் சம்பளப்பணம் போடப்பட்டுள்ளது. அதிலிருந்து வீட்டு வாடகை, பால், மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக பணம் எடுக்க வங்கி, ஏடிஎம்களில் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் அடுத்த வாரம் பொங்கல் பண்டிகை வருவதால்பொங்கல் செலவுக்கு அதிக பணம் தேவை இருப்பதால் வங்கி மற்றும் ஏடிஎம்களில் வழக்கத்தைவிட மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. வங்கி மற்றும் ஏடிஎம்களில் வரிசையில் கால் கடுக்க நிற்கும் அவல நிலைக்கு எப்போது விடிவு பிறக்குமோ என்று மக்கள் புலம்புகின்றனர்.
வங்கி, ஏடிஎம்களில் தொடரும் தட்டுப்பாடு பொங்கல் பண்டிகைக்கு பணம் எடுக்க இப்போதே வரிசையில் நிற்கும் நிலை
Reviewed by மறத்தமிழன்
on
January 04, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
January 04, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.