Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 9, 2017

கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகியது ஏன்? வெளியான அதிர்ச்சி தகவல்



பி.சி.சி.ஐ கொடுத்த அழுத்தத்தால் தான் தோனி கேப்டன் பதவியிலிருந்து விலகியதாக பீகார் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ஆதித்யா வர்மாதெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி கேப்டனாக திகழ்ந்த தோனி கடந்த இரண்டு  ஆண்டுகளுக்கு முன்பே டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றிருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒருநாள் மற்றும் டி.20 அணிகளின் கேப்டன் பதவியிலிருந்தும் விலகினார். இது தோனியின் சொந்த முடிவு என்று கூறப்பட்டது.
ஆனால், தோனி பதவி விலகியது அவரது சொந்த முடிவு இல்லை என்றும் பி.சி.சி.ஐ கொடுத்த அழுத்தமே தோனி விலகியதற்கான காரணம் என்றும் பீகார் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளரான ஆதித்யா வர்மா கூறியுள்ளார். பி.சி.சி.ஐ.., இணைச் செயலாளர் அமிதாப் சவுத்ரி கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே தோனி இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.