January 3, 2017
ஓ பன்னீர்செல்வத்திடம் இருந்து ராஜினாமா கடிதத்தை வாங்கியது மன்னார்குடி கோஷ்டி?
இதை சசிகலா உட்பட மன்னார்குடி கோஷ்டியால் ஜீரணிக்க முடியவில்லை. இதையடுத்து அதிமுக நிர்வாகிகள் ஆதரவு இருப்பதாக 25 நாட்கள் நாடகத்தை அரங்கேற்றி அதிமுக பொதுச்செயலர் பதவியைக் கைப்பற்றினார் சசிகலா.
அதிமுக பொதுச்செயலர் பதவியைக் கைப்பற்றிய உடனேயே மீண்டும் முதல்வர் பதவிக்கு குறிவைத்தது மன்னார்குடி கோஷ்டி. அமைச்சர்கள் மூலமாக போர்க்கொடி தூக்க வைத்தனர். உச்சகட்டமாக லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரையும் பன்னீர்செல்வத்துக்கு எதிராக கலகக் குரல் எழுப்பினார்.
நிலைமை மிகமோசமான நிலையில் எந்த காரணத்தை முன்னிட்டும் ராஜினாமா செய்ய வேண்டாம் என மத்திய அரசு ஓ பன்னீர்செல்வத்துக்கு அறிவுறுத்தல் விடுத்தது. ஆனால் போயஸ் கார்டனில் நேற்று நடைபெற்ற ஆலோசனைகளின் போது பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடி கொடுத்து ராஜினாமா கடிதத்தை வாங்கிவிட்டதாம் மன்னார்குடி கோஷ்டி.
நாளை முதல் மாவட்ட வாரியான அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை என்ற நாடகம் நடைபெற உள்ளது. வரும் 9-ந் தேதி வரை நடைபெற உள்ளது இந்த நாடகம். இதற்குப் பின்னர் ஜனவரி 10 அல்லது 12-ந் தேதியன்று சசிகலா முதல்வராக பொறுப்பேற்க திட்டமிட்டுள்ளதாக கூறுகின்றன அதிமுக வட்டாரங்கள்.
ஓ பன்னீர்செல்வத்திடம் இருந்து ராஜினாமா கடிதத்தை வாங்கியது மன்னார்குடி கோஷ்டி?
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 03, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 03, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.