January 17, 2017
போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச்செல்லும் போலீஸ்!!
தமிழர்களின் பராம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ள நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று நடக்கவிருந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தடுத்து நிறுத்தப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள், வாடிவாசலில் மாடுகள் விடும்வரையும், தடையை நிரந்தரமாக நீக்கக்கோரியும் நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அலங்காநல்லூர் வாடிவாசலிலேயே அமர்ந்து இரவு முழுவதும் போராட்டம் தொடர்ந்தனர்.
இந்நிலையில், போலீசாரின் தடியடி எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என எதிர்ப்பார்த்த நிலையில், தற்போது கலைந்து செல்லுமாறு எச்சரிக்கை விடுத்தனர். இதனைத்தொடர்ந்து, வலுக்கட்டாயமாக போராட்டக்காரர்களை இழுத்துச்சென்று கைதுசெய்து வருகின்றனர்.
போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச்செல்லும் போலீஸ்!!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 17, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 17, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.