Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 15, 2017

நடிகை திரிஷாவின் ட்விட்டர் கணக்கு மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது!



பீட்டா அமைப்பு ஜல்லிக்கட்டு நடத்த முட்டுக்கட்டை போட்டுவரும் நிலையில் அந்த அமைப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பீட்டா அமைப்புக்கு நடிகை த்ரிஷா ஆதரவு அளிப்பதாகக் கூறி சமூக வலைதளங்களில் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் அவருக்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்துவருகின்றனர்.
இந்நிலையில், நேற்று நடிகை திரிஷா எச்.ஐ.வி தொற்றுகாரணமாக இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பதிவுகள் சிலரால் பரப்பப்பட்டன. 
இதுகுறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று தன்குறித்த அவதூறு படத்தை பகிர்ந்து திரிஷா கண்டனம் தெரிவித்துள்ளார். இச்செயலால் தான் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக திரிஷா கூறியுள்ளார்.
“ஒரு பெண்ணையும் அவரது குடும்பத்தையும் இழிவுபடுத்துவது தான் தமிழ் கலாச்சாரமா?” என கேள்வி எழுப்பியுள்ள நடிகை த்ரிஷா, “நீங்கள் தமிழர் என்பதற்கும், தமிழ் கலாச்சாரம் குறித்து பேசுவதற்கும் வெட்கப்பட வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
திரிஷாவின் டிவிட்டர் ஹேக்:
சமூக வலைத்தளங்களில் தன் மீதான விமர்சனக்களை எதிர்கொண்டு வரும் திரிஷா, டிவிட்டர் வாயிலாகவே அதனை எதிர்கொண்டு வந்த நிலையில், சமீபத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிரான தகவலை பகிர்ந்தார்.
அதில் “நான் ஒரு தமிழன், நான் பீட்டாவை ஆதரிக்கின்றேன், மிருகங்கள் மீதான அவர்களின் குரூரத்தையும் நான் ஆதரிக்கின்றேன், எவ்வளவு பழமையான கலாச்சாரம் ஆயினும் ஜல்லிக்கட்டு தடை செய்யப்படவேண்டும்” என நடிகை திரிஷா பதிவிட்டிருந்தார்.

ஏற்கெனவே திரிஷா மீது ஜல்லிக்கட்டு ஆதரவாளார்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், இப்பதிவைக்கண்ட பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
ஹேக்கர்களால் முடக்கம்:
தனது முந்தைய பதிவு, தன்னால் பகிரப்படவில்லை என்றும் மர்ம நபர்களால் அது பகிரப்பட்டுள்ளது என்றும் தகவலை அவர் பதிவிட்டார்.
மேலும், ஹேக்கர்களால் விஷமமாக ஏதேனும் கருத்துக்கள் பகிரப்படுவதை தடுக்க அவராகவே தனது டிவிட்டர் கணக்கை முடக்கி வைத்துள்ளார்.
திரிஷாவை சுற்றியே பல சலசலப்புகள் ஏற்பட்டிருந்த நிலையில், திரிஷாவின் டிவிட்டர் கணக்கு மர்மநபர்களால் ஹேக் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திரிஷாவுக்கு கமல் ஆதரவு:
இந்நிலையில், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் நடிகை த்ரிஷாவுக்கு எதிரான தர்க்கத்தை நேசத்துடன் தொடர வேண்டுமென நடிகர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
  

அவர்க்கும் நமக்குமுள வேற்றுமை ஊரறியட்டும் கன்னியும் வாழ நம் காளையும் வாழ வழி செய்வோம். தர்க்கம் தொடர்க நேசத்துடன்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.