January 11, 2017
பன்னீர் செல்வத்தை சசிகலா எப்படி அழைக்கிறார் என்று தெரியுமா?
முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை அமைச்சர் என்று சசிகலா அழைப்பதால் இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக அமைச்சர்களை சந்தித்து பேசும் சசிகலா, அமைச்சர் பெருமக்களே என அழைக்கிறார். அங்கு முதல்வர் பன்னீர் செல்வம் இருந்தாலும், அவரை முதல்வர் என அவர் அழைப்பதில்லை.
பன்னீர் செல்வத்தின் உண்மையான விசுவாசம் காரணமாகவே அவருக்கு முதல்வர் பதவியை கொடுத்து ஜெயலலிதா அழகு பார்த்துள்ளார். எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் வளர்த்த கட்சி தன்னால் பிரிந்துவிடக்கூடாது என்ற காரணத்தினாலேயே பன்னீர் செல்வம் அமைதியாக இருந்து வருகிறார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், கட்சியில் ஒரு சிலர் பன்னீர் செல்வத்துக்கு மரியாதை கொடுக்காமல் இருப்பது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பன்னீர் செல்வத்தை சசிகலா எப்படி அழைக்கிறார் என்று தெரியுமா?
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 11, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 11, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.