January 22, 2017
தமிழர்களை பொறுக்கி என்று சு. சாமி கூறியபோது ஆதி ஏன் கொதிக்கவில்லை?.. வி.சி.க கேள்வி
ஹிப்ஹாப் தமிழா ஆதி யாருக்காக கொதிக்கிறார் என்று விடுதலைச் சிறுத்தைகள் துணை பொதுச் செயலாளர் ஆளூர் ஷானநவாஸ் கேட்டுள்ளார்.
தமிழர்களின் போராட்டத்தை தொடர்ந்து பொறுக்கிகள் என்று எழுதி வருகிறார் சுப்பிரமணியம் சாமி, அதேபோல அறப்போராட்டத்தை ராதா ராஜன் இழிவிபடுத்தினார். எச். ராஜாவும் மத வெறியை விதைக்கத் துணிந்தார். இதனால்தான் பாஜகவை குறி வைத்து போராட்டத்தில் தாக்குகின்றனர். இதில் என்ன தவறு என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆளூநர் ஷாநவாஸ் கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கும் சில கேள்விகளை அவர் முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக ஷாநவாஸ் தனது முகநூல் பக்கத்தில் போட்டுள்ள பதிவு:
தமிழர்களை பொறுக்கிகள் என்று தொடர்ந்து எழுதி வருகிறார் சுப்ரமணிய சுவாமி. தமிழ் இளைஞர்களின் அறப்போரை இழிவுபடுத்தினார் ராதாராஜன். மதம் கடந்த மக்கள் எழுச்சியில் மதவெறியை விதைக்கத் துணிந்தார் எச்.ராஜா.
இவர்கள் மூவருமே ஆர்.எஸ்.எஸ் காரர்கள். அதனால் தான், மக்கள் சினம் கொண்டு ஆர்.எஸ்.எஸ்ஸையும் அதன் அரசியல் வடிவமான பாஜகவையும் அதன் அதிகாரக் குறியீடாக உள்ள மோடியையும் தாக்குகின்றனர். இதில் என்ன பிழை?
சு.சுவாமியும் ராதா ராஜனும் எச்.ராஜாவும் இந்த போராட்டத்தை இழிவு செய்த போது கொதிக்காத ஹிப் ஹாப் ஆதி, இப்போது ஏன் கொதிக்கிறார்? யாருக்காக கொதிக்கிறார்? என்று கேட்டுள்ளார் ஷாநவாஸ்.
தமிழர்களை பொறுக்கி என்று சு. சாமி கூறியபோது ஆதி ஏன் கொதிக்கவில்லை?.. வி.சி.க கேள்வி
Reviewed by மறத்தமிழன்
on
January 22, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
January 22, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.