Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 2, 2017

அதிமுக பொதுச்செயலர் பதவி: சசிகலாவுக்கு எதிரான சசிகலா புஷ்பா வழக்கில் இன்று மாலை தீர்ப்பு



சென்னை: அதிமுக பொதுச்செயலராக சசிகலாவை நியமித்ததை எதிர்த்து சசிகலா புஷ்பா தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று மாலை தீர்ப்பு அளிக்கிறது.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலராகியுள்ளார் சசிகலா நடராஜன். முன்னதாக அதிமுகவின் சட்ட விதிகளின்படி கட்சி உறுப்பினராக 5 ஆண்டுகாலம் தொடர்ந்து நீடிக்காதவர் சசிகலா நடராஜன்; ஆகையால் சசிகலா அதிமுக பொதுச்செயலராக முடியாது என ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வரன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கல்யாணசுந்தரம் தீர்ப்பை ஒத்திவைத்தார். இதனிடையே கடந்த மாதம் 28-ந் தேதி அதிமுக பொதுச்செயலர் பதவிக்கு போட்டியிடுவதற்கான விண்ணப்பம் வாங்க லிங்கேஸ்வரன், அக்கட்சி தலைமை அலுவலகம் சென்றிருந்தார்.அப்போது சசிகலா ஆதரவாளர்கள் அவரை கொலைவெறியுடன் தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.

மேலும் சென்னையில் கடந்த மாதம் 29-ந் தேதி கூடிய அதிமுக பொதுக்குழுவில் சசிகலா அதிமுக பொதுச்செயலராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் கடந்த 31-ந் தேதி அதிமுக பொதுச்செயலராக பதவியேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் சசிகலா புஷ்பா தொடர்ந்த வழக்கில் இன்று மாலை நீதிபதி கல்யாணசுந்தரம் தீர்ப்பு வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.