January 4, 2017
திமுக இளைஞரணி பதவி…! உதயநிதி ஸ்டாலின், துரை தயாநிதி.. கடும் மோதல்..!!
திமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் ஸ்டாலின் செயல்தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடல்நிலை சரியில்லாததாலும், அவருக்கு ஓய்வு தேவைப்படுவதாலும் கட்சியின் தலைமை பொறுப்பை ஸ்டாலின் ஏற்றுள்ளதாக கூறப்படுகிறது.
திமுகவின் சட்டவிதிகளில் மாற்றம் செய்யப்பட்டு இந்த செயல் தலைவர் பதவி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டாலின் செயல்தலைவராக அறிவிக்கப்பட்டது கருணாநிதியின் குடும்பத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருப்பதாக தெரிகிறது.
ஸ்டாலின் திமுக இளைஞரணி தலைவராக செயல்பட்டபோது பொருளாளராக பொறுப்பேற்றார். இப்போது பொருளாளராக இருந்து கொண்டே செயல்தலைவராகவும் செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திமுக இளைஞரணி தலைவர் பதவிக்கு அவரது குடும்பத்தில் கடும் போட்டி ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. ஸ்டாலின் மகனும், நடிகருமான உதயநிதிஸ்டாலினும், அழகிரி மகன் துரை தயாநிதிக்கும் இடையே ஏற்பட்டுள்ள போட்டி காரணமாக மோதல் போக்கு துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
கருணாநிதிக்கு பிறகு தலைமை பொறுப்பை கைபற்றியிருக்கும் ஸ்டாலின், தனக்கு பிறகு மகன் உதயநிதிஸ்டாலினுக்கு இளைஞரணி தலைவர் பதவி வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஸ்டாலினுக்கு எதிராக செயல்பட்டதாக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அழகிரி, தற்போது தனது மகன் துரை தயாநிதிக்கு இளைஞரணி தலைவர் பதவியை பெற்று தர முயற்சிப்பதாக தெரிகிறது.
ஸ்டாலின் மற்றும் அழகிரி இடையே வாரிசுகளுக்காக ஏற்பட்டுள்ள இந்த மோதல் போக்கு கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக திமுக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
திமுக இளைஞரணி பதவி…! உதயநிதி ஸ்டாலின், துரை தயாநிதி.. கடும் மோதல்..!!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 04, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 04, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.