January 17, 2017
பீட்டாவிற்கு கைக்காட்டி விட்டு தமிழருக்கு டாட்டா காட்டும் மோடி அரசு!
தமிழகமே கொந்தளித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்கள் பல முழக்கங்களை முன்வைக்கின்றனர். இதில் முக்கியமானது பீட்டாவை தடை செய்.
உண்மையில் ஜல்லிக்கட்டு மீதான தடைக்கு பீட்டா தான் காரணமா என்றால் நிச்சயம் இல்லை என்பதே உண்மை. உயர்நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றங்களில் ஒருவர் தேவையில்லாமல் ஒரு வழக்கு தொடர்ந்தால் அபராதம் விதித்து விடுவார்கள்.
மற்றொரு விசயம். ஒரு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தால் கூட மத்திய அரசு நினைத்தால் எளிதாக அவசரச் சட்டம் கொண்டு வர முடியும். தமிழர்கள் இவ்வளவு கொந்தளித்தும் ஏன் பிரதமர் மோடி இன்னும் வாய் திறக்கவில்லை.
பசுமாட்டை அறுத்து சாப்பிட அனுமதி அளிக்கும் நாட்டின் பிரதமர் அதனை தழுவுவதற்கு உள்ள தடையை ஏன் நீக்க முன்வரவில்லை. ஆக மத்திய அரசுக்கு ஜல்லிக்கட்டு நடத்துவதில் உடன்பாடு இல்லை.
அதனை தடை செய்ய வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம். இதற்கு பீட்டாவை பயன்படுத்திக் கொண்டார்களே தவிர, பீட்டா இந்த தடைக்கு காரணம் இல்லை.
ஒரு வேலை போராட்டக்காரர்களில் சிலர் சொல்வது போல் பீட்டாவை தடையே செய்து விட்டாலும், வேறு ஒரு அமைப்பின் பெயரில் ஒருவர் ஜல்லிக்கட்டை தடை செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்தால் என்ன செய்வது.
மீண்டும் போராட்டம் நடத்த வேண்டிய சூழல் வரும். ஆக உண்மையான காரணத்தை போராட்டக்காரர்களில் சிலர் புரிந்து கொள்ள வேண்டும். போராட்டக்காரர்கள் தங்களது யுக்தியை மாற்றினால் எளிதில் வெற்றி இலக்கை எட்டி விடலாம்.
பீட்டாவிற்கு கைக்காட்டி விட்டு தமிழருக்கு டாட்டா காட்டும் மோடி அரசு!
Reviewed by மறத்தமிழன்
on
January 17, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
January 17, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.