January 12, 2017
தமிழர் பாரம்பரியத்தின் அடையாளமான ஜல்லிக்கட்டின் வரலாறு..!
ஜல்லிக்கட்டு பழந்தமிழ் இலக்கியங்களில், ஏறுதழுவல் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அது நமது பாரம்பரியத்தின் அடையாளம் என்பதை எடுத்துக்காட்டும் சான்றாக இந்த தகவல் உள்ளது. ஏறுதழுவல் என்பது காளையை அடக்கும் வீர விளையாட்டின் பெயராக இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது.
சிந்துசமவெளி நாகரிகம் சார்ந்த முத்திரை ஒன்றில் அடக்க முயலும் வீரரை ஒரு காளை தூக்கி எறிவது போன்றும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது போன்ற ஆதாரங்கள் மூலம் கி.மு 2000 ஆண்டு காலத்திலேயே ஏறுதழுவல் வழக்கத்தில் இருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்.
சல்லிக்கட்டு என்பது காளையை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவது. இதில் சல்லி என்பது காளையன் கழுத்தில் பணம் அல்லது முந்தைய காலத்தில் புழக்கத்தில் இருந்த சல்லிகாசுடன், கட்டப்படும் வளையத்தை குறிக்கும் சொல்லாகும். மாட்டை அணையும் வீரருக்கு அந்த பணமுடிப்பு பரிசாக வழங்கப்பட்டது. நாளைடைவில் சல்லிக்கட்டு பேச்சுவழக்கில் திரிந்து ஜல்லிக்கட்டாக மாறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழர்களின் வீர விளையாட்டுக்களில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விளையாட்டு மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு, மற்றும் அவனியாபுரம் உள்ளிட்ட ஊர்களில் பிரபலமானது. ஆண்டுதோறும் தை மாதத்தில் பொங்கல் திருநாளை ஒட்டி ஜல்லிக்கட்டு நடத்தப் பெறுகின்றன. இந்த வீர விளையாட்டு தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக நடத்தப்படுகிறது.
மதுரை அலங்காநல்லூர் போன்ற இடங்களில் வாடிவாசல் வழியாக வெளியேறும் காளைகளை இளைஞர்கள் விரட்டிச் சென்று அதன் திமில் மீது தொங்கியபடி குறிப்பிட்ட தூரம் செல்கின்றனர். வேலி மஞ்சுவிரட்டில் ஒரு திடலில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டு அவை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் ஓடுவதும் அவற்றை இளைஞர்கள் விரட்டுவதும் நடைபெறுகிறது.
வட தமிழகத்தைப் பொறுத்தவரை வடம் மஞ்சுவிரட்டு என்ற பெயரில், 20 அடி நீளக் கயிற்றால் காளையைக் கட்டி, இருபுறமும் காளையை ஆண்கள் இழுத்துப் பிடிக்க, ஒரு சிலர் மட்டும் அதன் முன்னே நின்று கொம்பில் உள்ள பரிசுப் பணத்தை எடுக்க முயல்கின்றனர்.
ஸ்பெயின், போர்ச்சுகல், மெக்சிகோ போன்ற நாடுகளில் காளைச் சண்டை முக்கியமான தேசியப் பொழுதுப் போக்கு விளையாட்டாக இன்றும் நடத்தப்படுகிறது. காளைகளை அரங்கத்திற்குள் விரட்டி, ஆத்திரமூட்டி, இறுதியாக வீரர்கள் அவற்றை ஆயுதங்களால் தாக்கிக் கொல்வதே இந்த காளைச் சண்டையின் முடிவாக அமையும்.
இது போன்ற மேலை நாடுகளில் நடத்தப்படும் காளைச்சண்டைகள் பார்ப்பதற்கு நமது ஜல்லிக்கட்டை நினைவூட்டினாலும், இரண்டும் முற்றிலும் வேறுபட்டவை என்பதை போட்டியின் முடிவுகளே நிதர்சனமாக நமக்கு எடுத்துரைப்பவையாக உள்ளன.
தமிழர் பாரம்பரியத்தின் அடையாளமான ஜல்லிக்கட்டின் வரலாறு..!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 12, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 12, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.