January 9, 2017
ஜெயலலிதா படம் போட்ட கல்யாண பத்திரிக்கைகளுக்கு தடை!?
கடந்த, 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க., ஆட்சியே மீண்டும் அமைந்தது.
இதனால், அக்கட்சியினரின் திருமண நிகழ்ச்சி மற்றும் அழைப்பிதழ்களின் ஆர்டரை எதிர் பார்த்து, ஜெயலலிதா படத்துடன் கூடிய, 10 கோடி திருமண அழைப்பிதழ்களுக்கு வியாபாரிகள் ஆர்டர்கள் கொடுத்து இருந்திருக்கிறார்கள்.
வியாபாரிகளின் ஆர்டரின் பேரில், தயாரான அழைப்பிதழ்கள் நவம்பரில் வினியோகிக்கப்பட்டது. அவை தமிழகம் முழுவதும், 10 ஆயிரத்து, 125 விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், டிச., 5ல், ஜெயலலிதா இறந்தார். ஆயினும், ‘அழைப்பிதழ் விற்பனையில் பாதிப்பு ஏற்படாது’ என, வியாபாரிகள் நம்பினர். ஆனால், அ.தி.மு.க.,வுக்கு புது தலைமை பொறுப்பேற்றதால், நிர்வாகிகள் அப்படியே தடம் மாறி விட்டனர்.
தற்போது, தை மாத திருமணத்துக்காக, அ.தி.மு.க.,வினர் சிலர், ஜெயலலிதா படத்துடன் கூடிய அழைப்பிதழ்களை தேர்வு செய்து, மணமக்கள் பெயர்களை அச்சடித்து கட்சி நிர்வாகிகளிடம் வழங்கி திருமணத்திற்கு அழைப்பு விடுத்தனர்.
ஆனால், அவற்றை வழங்கினால், திருமணத்தில் கலந்து கொள்ள மாட்டோம் என, சில நிர்வாகிகள் தெரிவித்ததால், அதை ரத்து செய்து, புதிய தலைமை படத்துடன் கூடிய அழைப்பிதழ்களை வாங்கி வருகின்றனர்.
இதனால், ஜெயலலிதா படத்துடன் தயாரான, 10 கோடி அழைப்பிதழ்கள் தேக்கம் அடைந்துள்ளன. அவற்றின் மதிப்பு, 100 கோடி ரூபாய் என்பதால், ஆர்டர் கொடுத்த வியாபாரிகள், அச்சக உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திருமண சீசனை முன்னிட்டு, ஜெயலலிதா படத்துடன் கூடிய அழைப்பிதழ்களை, ஆர்டர் கொடுத்து இருப்பு வைத்தோம். அவற்றை மாவட்ட செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள் – எம்.பி.,க்கள் கூட பயன்படுத்த மறுப்பதோடு, தன் கட்சியினரையும் பயன்படுத்த தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், வியாபாரிகள், அச்சக உரிமையாளர்களுக்கு, கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட வியாபாரி ஒருவர் வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார்.
ஜெயலலிதா படம் போட்ட கல்யாண பத்திரிக்கைகளுக்கு தடை!?
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 09, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 09, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.