தமிழரின் பாரம்பரியமான விளையாட்டு ஜல்லிக்கட்டு இந்த போட்டியை தமிழகத்தில் தடைசெய்ய வேண்டும் பீட்டா அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என்று தடை விதித்து தீர்பளித்தது.
இதனையடுத்து இந்த ஆண்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு கட்டாயம் நடக்க வலியுறுத்தி கல்லூரி, பள்ளி, மாணவ, மாணவிகள், சமூக ஆர்வலர்கள், என பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மாட்டுப்பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு கட்டாயம் தடையை மீறி தமிழகத்தில் நடத்துவோம் என்று ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து ஜல்லிக்கட்டு தமிழகத்தில் எந்த வடிவத்திலும் அனுமதிக்க கூடாது என்று தமிழக அரசுக்கு மற்றும் டிஜிபிக்கு பீட்டா அமைப்பினர் கடிதம் எழுதியுள்ளனர்.
மேலும், உச்சநீதிமன்ற தீர்ப்பினை தமிழக அரசு மதித்து செயல்படவேண்டும் என்று தங்களது கோரிக்கையாக கடிதத்தில் தெரிவித்துள்ளனர். இதனால் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு இந்த ஆண்டும் நடைபெறுமா என்று கேள்விகுறியாக உள்ளது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.