January 28, 2017
நான் அவள் இல்லை’ இளம்பெண்ணின் தில்லாலங்கடி : கடுப்பான நீதிபதி
கர்நாடக மாநிலம், பெங்களூருவை சேர்ந்தவர் மகேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). திருப்பூரைச் சேர்ந்தவர் ஜெயா (பெயர் மாற்றப் பட்டுள்ளது).
இவர்கள் இருவருக்கும் 2012ல் சேலத்தில் வைத்து திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணம் பெங்களூரு சார்பதிவாளர் அலுவலகத்தில் முறைப்படி பதிவு செய்யப்பட்டது.
இவர்களின் குடும்ப வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக சென்றிருக்கிறது. 3 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் ஜெயாவுக்கு திருநெல்வேலியை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் பேஸ்புக்கில் நட்பு ஏற்பட்டிருக்கிறது.
இவர்களின் நட்பு நாளடைவில் நெருக்கமாக மாறியிருக்கிறது. இந்நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டு கணவர் வீட்டிலிருந்து ஜெயா வெளியேறினார்.
மகேஷ் எங்கு தேடியும் ஜெயா கிடைக்கவில்லை. இதனால் மகேஷ் போலீசில் புகார் அளித்திருக்கிறார். வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜெயாவை தேடி வந்தனர்.
இந்நிலையில், ஜெயா திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் வேறு ஒருவருடன் வசித்து வருவதாக தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து, அம்பாசமுத்திரத்துக்குச் சென்ற போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது, தன் பெயர் ஜெயா இல்லை என்றும், சுதா எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் மகேஷ், தன் மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி, திருநெல்வேலி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இம்மனு மீதான விசாரணையின்போது, ஜெயாவுடன் திருமணம் நடைபெற்றதற்கான திருமண அழைப்பிதழ், பதிவுச் சான்று, புகைப்படங்கள், வாக்காளர் அடையாள அட்டை, ஜெயசுதாவின் கல்லூரிச் சான்று போன்றவற்றை நீதிமன்றத்தில் சதீஷ் சமர்ப்பித்தார்.
இவ்வழக்கு விசாரணையின்போது, நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான ஜெயாவிடம் மேற்கண்ட ஆவணங்களை நீதிபதி மகிழேந்தி காண்பித்து விசாரணை நடத்தினாராம்.
ஆனால், திருமண புகைப்பட ஆல்பம், வாக்காளர் அடையாள அட்டை, வருமான வரி அட்டை போன்ற ஆவணங்களில் இருப்பது தான் இல்லை என ஜெயசுதா மறுத்ததாகக் கூறப்படுகிறது.
ஜெயா நாடகமாடுவதை உறுதிசெய்த நீதிபதி சதீஷுக்கு விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தார். மேலும் உண்மையை மறைக்கும் விதமாகவும், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும் செயல்பட்ட ஜெயசுதா மீது குடும்ப நலச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
திரைப்படங்களில் வரும் சம்பவத்தைபோன்று, “நான் அவள் இல்லை” என நீதிமன்றத்தில் இளம்பெண் வாதாடிய நிகழ்வு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
(படம் மாடலுக்கு மட்டுமே)
நான் அவள் இல்லை’ இளம்பெண்ணின் தில்லாலங்கடி : கடுப்பான நீதிபதி
Reviewed by மறத்தமிழன்
on
January 28, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
January 28, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.