January 26, 2017
பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட மேகாலயா கவர்னர் சண்முகநாதன் ராஜினாமா?
பாலியல் புகார் எழுந்ததாக மேகாலயா கவர்னர் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.மேகாலயா மாநில கவர்னராக இருப்பவர் சண்முக நாதன் இவர் தன்னுடைய பதவியை இன்று (26-01-17)திடீரென ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இவர் மீது கவர்னர் மாளிகை ஊழியர்கள் பாலியல் புகார் கூறியதாகவும், புகாரை ஜனாதிபதிக்கு கடிதமாக எழுதியுள்ளதாகவும் கூறப்படுகிறது.இதையடுத்து சண்முகநாதன் கவர்னர் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. தன் மீதான பாலியல் புகாரை அவர் மறுத்துள்ளார்.
பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட மேகாலயா கவர்னர் சண்முகநாதன் ராஜினாமா?
Reviewed by மறத்தமிழன்
on
January 26, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
January 26, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.