கேஷ் இல்லாமல் ஆன்லைன் மூலம் பண பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடியால் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஆப் 'பீம்' என்பது அனைவரும் அறிந்ததே
ஆனால் இந்த ஆப் மூலம் பணப்பரிவர்த்தனை செய்தால் சிறப்புக்கட்டணம் வசூல் செய்யப்படுவது தற்போது தெரிய வந்துள்ளது.
கிட்டத்தட்ட 2MB அளவுள்ள பீம் அப்ளிகேஷனை மொபைலில் நிறுவியதும் மொபைல் சிம் கார்டில் உள்ள இருப்புத்தொகையில் இருந்து ரூ.1.50 கழிக்கப்பட்டுவிடுகிறது என்று பல பயனாளர்கள் புகார் கூறியுள்ளனர்.
மேலும், பரிவர்த்தனைகள் சில சமயங்களில் தோல்வியில் முடிகிறது என்பதால் திரும்பத்திரும்ப முயற்சிக்க வேண்டியிருக்கிறது என்றும் கூறுகிறார்கள்.
இன்டர்நெட் வசதி இல்லாமலே கூட பயன்படுத்தலாம் என்று சொல்லி அறிமுகம் செய்யப்பட்ட பீம் அப்ளிகேஷனில் இப்படி கோளாறுகள் வருவதால் பயனாளர்கள் வெறுப்படைந்துள்ளனர்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.