January 4, 2017
அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் கோமா நிலைக்கு சென்ற பெண்
திருவாரூர் அரசு மருத்துவமனையில் , பெண் ஒருவருக்கு இரத்ததை மாற்றி கொடுத்ததால் அவர் கோமா நிலைக்கு சென்றதாக அவரது உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.
திருவாரூர் அரசு மருத்துவமனையில் கமலா என்ற பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். பிரசவம் முடிந்த நிலையில் கமலாவிற்கு இரத்தம் ஏற்றப்பட்டது. இந்நிலையில் கமலா கோமா நிலைக்கு சென்றுள்ளர். இதையடுத்து கமலாவிற்கு ’பி நெகட்டிவ்’ இரத்தப் பிரிவுக்கு பதிலாக ’ பி பாசிட்டிவ் ’ பிரிவு இரத்தம் ஏற்றப்பட்டுள்ளதால் தான் அவர் கோமா நிலைக்கு சென்றுள்ளார் என அவரது உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். திருமணமாகி 19 ஆண்டுகளுக்கு பின் முதல் குழந்தை பிறந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது என அவரது உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த புகாருக்கு பதில் அளித்துள்ள திருவாரூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் மீனாட்சி சுந்தரம் , கமலாவிற்கு முன்னதாக இதைய நோய்க்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது என கூறியுள்ளார். மேலும் கமலாவின் இரத்தத்தை பரிசோதித்த நன்னிலம் மருத்துவமனை தவறு செய்துள்ளது. அவருடைய இரத்த மாதிரியை எடுத்து பரிசோதனை உட்படுத்தி உள்ளோம் என கமலாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கனகலட்சுமி தெரிவித்துள்ளார்.
அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் கோமா நிலைக்கு சென்ற பெண்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 04, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 04, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.