January 28, 2017
பிரதமருக்கு எதிராக கோஷம் போட்ட போராட்டக்காரர்கள் தேச விரோதிகள் - நிர்மலா சீதாராமன் ஆவேசம்
நம் நாட்டின் கொடியை எரித்தவர்கள் தேச விரோதிகள் தான். அவர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற வன்முறை எதிர்பாராதது என்று கூறியுள்ள நிர்மலா சீதாராமன், மாணவர் புரட்சியில் தேச விரோதிகள் ஊடுருவியிருந்தனர் என்று தெரிவித்தார்.
சென்னை தி. நகரில் கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன் ஜல்லிக்கட்டுக்காக மத்திய அரசு தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாக கூறினார்
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசுக்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து உள்ளது. ஜல்லிக்கட்டுக்காக நடைபெற்ற மாணவர் புரட்சியில் தேச விரோதிகள் ஊடுருவி விட்டனர். தேசத்திற்காக எதிராக முழக்கமிடுபவர்கள், தேசியக்கொடியை எரிப்பவர்கள் தேச விரோதிகள்தான். இது என்னுடைய தேசம் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், பிரதமரின் பதவிக்கு மதிப்பு தரவேண்டும். பிரதமர் மோடியை அதிக அளவில் விமர்சனம் செய்தனர். பிரதமர் மோடிக்கு எதிராக முழக்கம் எழுப்பியவர்கள் தேச விரோதிகள் என்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். சென்னையில் நடந்த கலவரத்தை யாரும் எதிர்பார்க்காவில்லை என்றும் தெரிவித்தார்.
எந்த மாநிலத்தையும் மத்திய அரசு புறக்கணிக்கவில்லை. அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு அரவணைத்து செல்கிறது. மத்திய குழுவின் அறிக்கைக்குப் பின்னர் வறட்சி நிவாரணம் வழங்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
பிரதமருக்கு எதிராக கோஷம் போட்ட போராட்டக்காரர்கள் தேச விரோதிகள் - நிர்மலா சீதாராமன் ஆவேசம்
Reviewed by மறத்தமிழன்
on
January 28, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
January 28, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.