Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 16, 2017

ஜல்லிக்கட்டு தடை: தமிழக அரசை பாராட்டும் சுப்ரமணியன் சுவாமி



சட்டத்தை மீறி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத அளவிற்கு காவல்துறை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட தமிழக அரசை பாராட்டுவதாக பாரதிய ஜனதா மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் எந்த ஒரு முக்கிய இடத்திலும் முறையாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கப்படவில்லை என்ற போதிலும், கிராமப்புறங்களில், காவல்துறைக்கு தகவல் அளிக்காமல், ஒரு சில இடங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜல்லிக்கட்டு நடத்தியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்பதுதான் தனது விருப்பம் என கூறியுள்ள அவர், நீதிமன்றத் தீர்ப்புக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.