January 22, 2017
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ரத்து?...இளைஞர்களின் எதிர்ப்பால் சென்னை திரும்புகிறார் ஓபிஎஸ்…
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ரத்து?...இளைஞர்களின் எதிர்ப்பால் சென்னை திரும்புகிறார் ஓபிஎஸ்…
ஜல்லிக்கட்டு நடைபெறுவதில் சிக்கல் நீடிப்பதால் மதுரையில் இருந்து முதலமைச்சா் ஓ. பன்னீா்செல்வம் இன்று சென்னை திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜல்லிக்கட்டு தடைக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்படும் வரை மாணவா்கள், இளைஞா்கள் பொதுமக்கள் ஆகியோர் உறுதியுடன் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், மதுரை மாவட்டம் அலங்காநல்லூாரில் இன்று நடைபெறுவதாக இருந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி இழுபறியில் உள்ளது
ஓபிஎஸ் இன்று காலை 10 மணிக்கு நடைபெறுவதாக இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசல் பகுதியில் பொதுமக்கள் நிரந்தர சட்டம் இயற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், ஜல்லிக்கட்டு போற்றி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுதொடா்பாக முதலமைச்சா். ஓ. பன்னீா்செல்வம் மதுரையில் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதன்பின்னா் அலங்காநல்லூா் பயணத்தை ரத்து செய்து விட்டு அவா் சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ரத்து?...இளைஞர்களின் எதிர்ப்பால் சென்னை திரும்புகிறார் ஓபிஎஸ்…
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 22, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 22, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.