சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் சசிகலா புத்தாண்டு வாழ்த்து கூறி அறிக்கை வெளியிட்டார். இன்று சிவகுமாரின் மறைவுக்கு இரங்கல் அறிக்கை வெளியிட்டார். அதில் சசிகலாவின் கையெழுத்து இடம் பெற்றிருந்தது.
இன்று ஜல்லிக்கட்டு விவகாரத்தில் ஸ்டாலின் பேச்சு உண்மைக்கு புறம்பானது. காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருந்தபோது தான் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டது. ஜல்லிக்கட்டுக்கான சட்ட போராட்டங்களை ஸ்டாலின் அறிந்து கொள்ள வேண்டும் என்று ஒரு அறிக்கையை வெளியிட்டார் சசிகலா.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு பல்வேறு முயற்சிகளில் ஈடுப்பட்டார். ஜெயலலிதாவின் பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் ஏதிர்க் கட்சி தலைவர் ஸ்டாலின் பேசுவது பொறுப்பானது அல்ல.
எனவே அவர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடவேண்டாம் என்றும் அந்த அறிக்கையில் கூடியிருந்தார் சசிகலா.
கடைசியில் அவருடைய கையெழுத்து போடவில்லை. ஒருவேளை அவசரத்தில் போட மறந்து விட்டாரா? அவருக்கு தெரியாமல் அறிக்கை எதுவும் வெளியாகிவிட்டதா?


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.