Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 21, 2017

திருச்சி அருகே தடையை மீறி ஜல்லிக்கட்டு.. போலீஸ் தடியடியால் பரபரப்பு


திருச்சி அருகே, போலீசார் எச்சரிக்கையையும் மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்றதால், ஜல்லிக்கட்டில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே சில்லக்குடியில் 50க்கும் மேற்பட்ட காளைகளுடன் இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. ஜல்லிக்கட்டுக்கு தடையுள்ள நிலையில், அருகேயுள்ள நத்தம், அரசூர் ஆகிய கிராமங்களிலும் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்றது
.
போலீசார் எச்சரிக்கையையும் மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்றதால், ஜல்லிக்கட்டில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஜல்லிக்கட்டு போராட்டங்களில் ஈடுபடுவோர் மீது போலீசார் தடியடி நடத்தவில்லை என முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார். அதேநேரம், ஜல்லிக்கட்டு நடத்தியோர் மீது தடியடி நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.