January 10, 2017
வாய் தகராறால் ஓடும் காரில் மனைவியை கத்தியால் குத்திய கணவர்
டெல்லியில் உள்ள ஹரிநகரில் 60 வயது நபர் மனைவியுடன் ஏற்பட்ட வாய்த்தகராறில் மனைவியை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி ஆனந்த் நிகேதன் பகுதியில் வசித்து வருபவர் முகேஷ் மோகா (வயது 60) இவரது மனைவி பெயர் மஞ்சு மோகா (வயது 58) இந்த தம்பதிக்கு ஒரு மகள் ஒரு மகன் உள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை 11.30 மணி அளவில் முகேஷ் தனது மனைவியை அலுவலகத்திற்கு சென்று விட காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது கணவன் மனைவிக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. கடைசியில் தகராறு முற்றிய நிலையில் கடும் கோபம் அடைந்த முகேஷ் தான் வைத்து இருந்த கத்தியை எடுத்து மஞ்சுவை இரண்டு முறை குத்தினார். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த மஞ்சு சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து வழக்கு பதிவுசெய்த போலீசார் முகேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லியில் ஓடும் காரில் மனைவியை கணவர் குத்தி கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாய் தகராறால் ஓடும் காரில் மனைவியை கத்தியால் குத்திய கணவர்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 10, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 10, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.