Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 17, 2017

சாகும் வரை எம்.ஜி ஆரை மறக்காத குத்துச்சண்டை வீரர் முகமது அலி, ஏன்?



மறைந்த குத்துச்சண்டை பிதாமகன் ‘தி கிரேட்டஸ்ட்’ முகமது அலி தமிழகத்திற்கு வந்த போது அப்போதைய முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மீன் கறி விருந்து கொடுத்து அசத்தினார்.
என்னைக் கவர்ந்த குத்துச்சண்டை வீரர் அலி மட்டும்தான் என்று சொல்லியிருந்த, அன்றைய தமிழக முதல்வரும், குத்துச் சண்டைப் பிரியருமான எம்.ஜி.ஆரின் அழைப்பின் பேரில் 1980ம் ஆண்டு சென்னைக்கு வந்திருந்தார் அலி.
ஆரவாரமாக நடைபெற்ற போட்டிகளின் முடிவில், முகமது அலிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய எம்.ஜி.ஆர் எங்கள் தமிழகத்திற்கு வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு என்ன வேண்டுமோ கேளுங்கள் என அலியிடம் கேட்டாராம்.
அதற்கு முகமது அலி, சென்னையில் மீன் சாப்பாடு சுவையாக இருக்கும் என்கிறார்களே.அது எங்கு கிடைக்கும்? என்றாராம்.
வீட்டுக்கு வரும் விருந்தாளிக்கு வயிறு நிறைய உணவு கொடுத்து அனுப்பும் வள்ளல் தன்மை கொண்ட எம்.ஜி.ஆரிடம், தான் விரும்பும் முகமது அலி கேட்டால் சும்மா விடுவாரா…அடுத்த நொடியே ராமாவரம் தோட்டத்தில் சுட சுட விருந்து தயாரானது.
ராமாவரம் தோட்டத்தில் அசைவ உணவு சமைப்பதில் தேர்ந்தவரான மணி என்பவரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
ஜானகி அம்மையாரின் மேற்பார்வையில் சாதம், மீன் குழம்பு, வஞ்சிரம் மீன் வறுவல், வேகவைத்த முட்டை, இறால் ஃப்ரை, சிக்கன் வறுவல், உடன் பாயாசம் என விதவிதமான உணவுவகைகள் தயார் செய்யப்பட்டு முகமது அலி தங்கியிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தது.
உணவு சாப்பிட்டு முடித்த பின்னர் மீன் சாப்பாடு எப்படி இருந்தது என எம்.ஜி.ஆர் கேட்டாராம். அதற்கு முகமது அலி, ‘எனக்கு உலகில் எங்கு சென்றாலும் விதவிதமான உணவைத்தர ஆயிரம் பேர் இருக்கிறார்கள்.
ஆனால், அது என்னைக் கவர்வதற்கானதாக இருக்கும். நீங்கள் அளித்த விருந்தில் உணவில் சுவையை விட கூடுதலாக இருந்தது உங்கள் அன்புதான் என்று நெகிழ்வாக கூறினாராம் முகமது அலி.நான் சாகும் வரை உங்கள் அன்பை மறக்க மாட்டேன். என்றார்.
இதைக் கேட்டு எம்.ஜி.ஆர் மகிழ்ச்சியடைந்தார்.  முகமது அலியின் சென்னை விசிட் பற்றி இன்றைக்கும் பலர் நினைவு கூறுகின்றனர.
திகட்டத் திகட்ட மீன் குழம்பு சாப்பாடு சாப்பிட்டு சென்னை மக்களிடமும், புரட்சித்தலைவரிடமும் இருந்து அன்போடு பிரியாவிடை பெற்ற முகமது அலி தமிழ்நாடு பற்றி பேச்சு வரும் போதெல்லாம் எம்ஜிஆர் அன்பு பற்றியும் சொல்லிக் கொண்டே இருந்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.