Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 31, 2017

வெள்ளி வாங்கின சிந்துவை நினைவு கொண்ட குடியரசு தலைவர், தங்கம் வென்ற மாரியப்பனை மறந்து விட்டார் ஏன்?


நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற பி.வி.சிந்து, சாக்சி மாலிக், தீபா கர்மாகர் போன்றோர் திறமை குறித்து பேசினார்.

ஆனால், பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு தங்கம் பதக்கம் வென்று வந்த தமிழன் மாரியப்பனை நினைவு கூற மறந்து விட்டார்.

மேலும் அவர் உரையில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள்:

கறுப்பு பணம், ஊழலுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை.

தாமாக முன்வந்து எரிவாயு மானியத்தை விட்டுக்கொடுத்தவர்கள் ஏழைகளுக்கு உதவி செய்துள்ளார்கள்.

வங்கி முறையில் வராதவர்களுக்கு ஜன்தன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

20 கோடி பேருக்கும் அதிகமானவர்களுக்கு ரூபே கார்டு வழங்கப்பட்டுள்ளது.

26 கோடி பேருக்கு ஜன்தன் வங்கிக் கணக்குகள் தொடங்கித் தரப்பட்டுள்ளன.

சிறு தொழில் செய்பவர்களுக்கு நிதியுதவி செய்வதற்காக முத்ரா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் விவசாயிகளுக்காகவே அரசின் கொள்கைகள் வகுக்கப்படுகின்றன.

மத்திய அரசின் திட்டங்கள் மூலம் 3 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன.

5 கோடி இல்லங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்படுகின்றன.

இதுவரை மின்சாரவசதி இல்லாமல் இருந்த 11,000 கிராமங்களுக்கு மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளின் வாழ்வில் மாற்றங்களை கொண்டு வருவதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பருப்புகளின் விலைகள் உயர்ந்ததைத் தொடர்ந்து அதைக் கட்டுப்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுத்தது.

ஒலிம்பிக்கில் ஜொலித்த பி.வி.சிந்து, சாக்சி மாலிக், தீபா கர்மாகர் மூலம் பெண்களின் திறமை வெளிப்பட்டது.

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் மேம்பாட்டுக்கும் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

12 வாரங்களாக இருந்த பேறுகால விடுப்பு 26 வாரங்களாக உயர்த்தப்பட்டது.

வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 6 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுடன் கூடிய திட்டம் செயல்படுத்தப்பட்டது.

குறைந்தபட்ச கூலி வழங்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கும் வங்கி முறை மூலம் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஸ்டாண்ட்அப் இந்தியா திட்டத்தின் மூலம் தலித், பழங்குடியின தொழில்முனைவோரை உருவாக்க நடவடிக்கை.

பழங்குடியினர்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் வேலைவாய்ப்பை பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கும் சமவாய்ப்புகளை வழங்க அரசு உறுதிபூண்டுள்ளது.

சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கே அரசு பணியாற்றி வருகிறது.

ஏழைகள், நலிந்த பிரிவினருக்காகவே அரசு திட்டங்களை தீட்டி செயல்படுத்துகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.