January 15, 2017
மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தடையை மீறி ஜல்லிக்கட்டு
பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தடையை மீறி இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது.
உச்சநீதிமன்ற தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதை தடுக்க மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் பொங்கல் திருநாளையொட்டி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. விளாங்குடியில் கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் பலர் ஒன்றுகூடி, தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்தினர்.
இதேபோல் முடக்கத்தான் பகுதியிலும் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. இதற்காக, தற்காலிக வாசல் அமைத்து 10க்கும் மேற்பட்ட காளைகளை ஒட விட்ட வீரர்கள், சீறிப்பாய்ந்து அவற்றை அடக்கினர். அப்போது, தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தியவர்களை போலீஸார் கைது செய்ய முயன்றதால் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை அலங்காநல்லூரிலும் தடையை மீறி இன்று அதிகாலை ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. இதில் இளைஞர்கள் பலர் ஆர்வமுடன் பங்கேற்று ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கி, பொங்கல் திருநாளைக் கொண்டாடினர்.
மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தடையை மீறி ஜல்லிக்கட்டு
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 15, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 15, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.