January 16, 2017
காவல் நிலையம் அருகே பலாத்காரம் செய்து பெண் கொலை : போலீஸார் தீவிர விசாரணை
சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் காவல்நிலையம் அருகே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான காலியிடம் உள்ளது.
இதில் செடிகொடிகள் மற்றும் சீமைக்கருவேல மரங்கள் உள்ளதால் முட்புதராக காட்சியளிக்கிறது.
இப்பகுதியில் பவானிசாகர் பகுதியை சேர்ந்த பெண்கள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை மேய்ப்பது வழக்கம்.
நேற்று மாலை ஆடுமேய்க்கும் பெண் ஒருவர் முட்புதர்காட்டில் ஆடுகளை ஓட்டிச்சென்றபோது அப்பகுதியில் ஒரு பெண் சடலம் கிடந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து ஆடுமேய்க்கும் பெண் பவானிசாகர் காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்ததையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர்.
இறந்த பெண்ணுக்கு 45 வயது இருக்கும். ஒருகால் முறிக்கப்பட்ட நிலையில் உடை அலங்கோலமாக அவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
அருகே மதுபாட்டில் மற்றும் மீன் துண்டுகள் கிடந்தன. தகவலறிந்த சத்தியமங்கலம் டிஎஸ்பி பழனிச்சாமி சம்பவ இடம் சென்று விசாரித்தார்.
இப்பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது. சடலத்தை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பொங்கல் பண்டிகை தினத்தன்று காவல்நிலையத்திற்கு அருகிலேயே பெண் கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்ட பெண் யார், எந்த ஊரை சேர்ந்தவர், உடன் வந்தவர் யார் என விசாரணை நடக்கிறது.
காவல் நிலையம் அருகே பலாத்காரம் செய்து பெண் கொலை : போலீஸார் தீவிர விசாரணை
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 16, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 16, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.