Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 14, 2017

ஜல்லிக்கட்டை நடத்த நான் தயார், பீட்டா ஆதரவாளர்கள் தேச துரோகிகள்: எச்.ராஜா. எல்லோரும் நம்பிருங்கப்பா


ஜல்லிக்கட்டை நடத்த நான் தயாராக இருக்கிறேன். அமெரிக்க பெருநிறுவனங்களின் கைக்கூலியான பீட்டா அமைப்பின் ஆதரவாளர்கள் அனைவருமே தேச துரோகிகள் என பாஜக செயல் தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ஜல்லிக்கட்டு மற்றும் காவிரி பிரச்சனை குறித்து ஸ்டாலின் கூறும் கருத்துகளில் நேர்மை இல்லை. காவிரி டெல்டா மாவட்டங்களை திட்டமிட்டு பாலைவனமாக்கியதே திமுக அரசு தான்.

காவிரி டெல்டா பகுதிகளை பாலைவனமாக்கும் மீத்தேன் திட்டத்தில் திமுக கையெழுத்து போட்டுவிட்டு ஆட்சியில் இல்லாத நேரத்தில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது.

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசால் நீதிமன்றத்தை எதிர்த்து செயல்பட முடியாது. ஜல்லிக்கட்டை நடத்த நான் தயாராக இருக்கிறேன். அமெரிக்க பெருநிறுவனங்களின் கைக்கூலியான பீட்டா அமைப்பின் ஆதரவாளர்கள் அனைவருமே தேச துரோகிகள்.
கலாச்சார பண்பாட்டை அழித்து, விவசாயத்திற்கு பதில் பெட்ரோலியம் சார்ந்த முறையாக இந்தியாவை மாற்றுவதே பீட்டாவின் நோக்கம் என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.