January 16, 2017
ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடுவின் சொந்த ஊரான திருப்பதியில் போலீஸ் பாதுகாப்புடன் ஜல்லிக்கட்டு
ஆந்திராவில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் சொந்த ஊரான திருப்பதியில் போலீஸ் பாதுகாப்புடன் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபுநாயுடு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை தனது குடும்பத்தினருடன் அவரது பிறந்த ஊரான திருப்பதியை அடுத்த நாராவாரிபள்ளியில் கொண்டாடுவது வழக்கம்.
இந்த ஆண்டும் பொங்கலை கொண்டாட முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அங்கு வந்திருந்த நிலையில் நாராவாரிப்பள்ளியில் போலீஸ் பாதுகாப்புடன் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
இதில் திருப்பதி மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டின் போது கொம்புகளின் மீது பதக்கம் கட்டப்பட்டு திறந்துவிடப்பட்ட மாடுகளை இருபுறமும் நின்ற இளைஞர்கள் அடக்க முயன்றனர்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியின் போது எந்த இடையூறும் இன்றி போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்
ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடுவின் சொந்த ஊரான திருப்பதியில் போலீஸ் பாதுகாப்புடன் ஜல்லிக்கட்டு
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 16, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 16, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.