Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 21, 2017

மதுரை வாடிவாசலில் நாளை ஜல்லிக்கட்டு.! முதல்வா் பன்னீா் துவக்கி வைக்கிறார்.!


உலக வரலாற்றில் தலைவா்கள் இல்லாமல் இளைஞா்கள் நடத்திய மிக பெரிய போராட்டம் இதுவாகதான் இருக்கும்.
கொட்டும் மழையிலும், கடும் குளிரிலும், ஆண்கள், பெண்கள். பொதுமக்கள், சிறுவா், சிறுமியா் என அனைவரும் ஒன்று திரண்டு போராடினா்.
 
இந்த போராட்டத்துக்கு வெற்றிக் கிடைத்துள்ளது. இவா்களின் வெற்றி தமிழ் சமுதாயத்தின் வெற்றியாகவும், தமிழா்களின் வெற்றியாகவும் பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக, அவசரச் சட்ட வரைவு தயாரிக்கப்பட்டது.
அதன்படி, காட்சி படுத்தக்கூடாத விலங்கின பட்டியலில் இருந்து காளை நீக்கப்பட்டது.
இதையடுத்து இன்று சென்னை வந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ், ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டத்தை பிறப்பித்துள்ளார்.
இதன்மூலம் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கியுள்ளது.
இந்நிலையில் மதுரை அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய மூன்று இடங்களிலும் நாளை காலை ஒரே நேரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.