Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 11, 2017

ஜல்லிக்கட்டு பிரச்சனை. வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொண்ட புதுவை கவர்னர்



தமிழர்களின் கலாசாரமாக இருந்தாலும் ஜல்லிக்கட்டை நடத்தக் கூடாது என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கூறியுள்ளார். ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை தமிழகம் முழுவதும் வலுத்து வருகிறது.
சென்னை, மதுரை, கோவை, சேலம், காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மாணவர்கள், இளைஞர்கள் ஒன்றிணைந்து பேரணி, ஆர்ப்பாட்டம், போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி புதுவை மாநிலத்திலும் சட்டக்கல்லூரி மாணவர்கள் ரயில் மறியல் போராட்டத்தை நடத்தினர். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் வலுப்பெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னையில் நடந்த இந்தியா டுடே குழுமத்தின் மாநாட்டில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கலந்து கொண்டார்.
அப்போது அவர் கூறுகையில், தமிழர்களின் கலாசாரமாக இருந்தாலும், ஜல்லிக்கட்டை நடத்தக் கூடாது. காளையை அடக்க முயற்சி செய்யும் போது காளைக்கும், அதைப் பிடிப்பவர்களுக்கும் காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், ஜல்லிக்கட்டு சட்டரீதியாக தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு வேறு யாரும் தடை செய்யவில்லை என்று அவர் கூறினார்.
கிரண்பேடியின் இந்த கருத்துக்கு டுவிட்டரில் ஏராளமான கண்டனங்கள் எழுந்து வருகின்றன. ஜல்லிக்கட்டு பிரச்சனையில் தேவையில்லாமல் வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொண்டதாகவே பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.