Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 16, 2017

தமிழீழம் அமைப்பதற்கான தளத்தை அமைத்துக் கொடுத்தவர் எம்.ஜி.ஆர்: வைகோ புகழாரம்



சுதந்திரத் தமிழ் ஈழம் அமைவதற்கு ஆயுதக் களம் அமைத்துக் கொடுத்தவர் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மரண வாயிலில் தான் இருந்தபோதும் ஈழத்தமிழர்களையும், விடுதலைப்புலிகளையும் பாதுகாக்கத் துடித்தவர் எம்.ஜி.ஆர் என குறிப்பிட்டுள்ளார்.
எம்.ஜி.ஆர் குறித்த பல்வேறு செய்திகளை, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் தம்மிடம் கூறியதாக வைகோ தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்காக எம்.ஜி.ஆரிடம் நிதி உதவி கோரியபோது, 10 லட்சம் ரூபாய் தருவார் என எதிர்பார்த்திருந்த நிலையில், 2 கோடி ரூபாய் தருவதாக கூறியவர் எம்.ஜி.ஆர் என பிரபாகரன்
தெரிவித்ததாக வைகோ கூறியுள்ளார்.
மேலும், ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலத்தில், ஈழத்தமிழர் புனர்வாழ்வுக்காக 4 கோடி ரூபாய் எம்.ஜி.ஆர் கொடுத்ததாக பிரபாகரன் தெரிவித்தார் என வைகோ குறிப்பிட்டுள்ளார்.
போரில் காயப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு மதுரையில் தனியாக ஒரு மருத்துவமனையை ஏற்படுத்தி மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கவும், ஆயுதப் பற்றாக்குறையால் விடுதலைப் புலிகள் தவித்தபோது அவர்களுக்கு பேருதவியும் செய்தவர் எம்.ஜி.ஆர். என்று வைகோ கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.