Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 23, 2017

மாணவர்கள் மீது தடியடிக்கு எதிர்ப்பு கவர்னர் உரையை புறக்கணித்து தி.மு.க.-காங்கிரஸ் வெளிநடப்பு


ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் கொண்டுவரக்கோரி போராடிய மாணவர்கள் மீது தடியடி நடத்தியதை கண்டித்து இன்று கவர்னர் உரையை புறக்கணித்து தி.மு.க- காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது

சட்டசபை இன்று காலை 10 மணிக்கு கூடியதும் கவர்னர் வித்யாசாகர் ராவ் உரையை படிக்க தொடங்கினார். அப்போது எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து அரசின் செயல்பாடுகளை பற்றி விமர்சித்து பேசத் தொடங்கினார். ஆனால் அவருக்கு மைக் இணைப்பு கொடுக்கப்படாததால் அவர் கவர்னர் உரையை புறக்கணித்து  வெளிநடப்பு செய்தார்.

அவருடன் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.இதேபோல் காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ. ஆகியோரும் கவர்னர் உரையை  புறக்கணித்து வெளியேறினார்கள்.

சட்டசபையில் இருந்து வெளியே வந்த மு.க. ஸ்டாலின் நிருபர்களி டம் கூறியதாவது:-

இந்த ஆட்சி சாகுபடிக்கான நீரினை முறையாகப் பெற்றுத்தராத கொடுமையினால், 244 தமிழக விவசாயிகள், தற்கொலை செய்து கொண்டும், பயிர்கள் கருகிய வேதனையினால் மாரடைப்பாலும் மறைந்திருக்கிறார்கள்.

அதுபற்றி இந்த அவையைக் கூட்ட வேண்டுமென்று எழுப்பப்பட்ட பிரச்சினைகளுக்கு இந்த ஆட்சியினர் ஏதாவது பதில் அளித்தது உண்டா? சாவு எண்ணிக்கை 200-க்கு   மேலான பிறகுதான் மிகக் குறைந்த அளவில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.  அந்த தொகை அந்த விவசாயிகளின் மரணத்தை கேலி செய்கின்ற அளவிலேதான் அமைந்துள்ளது.

கலாச்சாரத்திற்கு எதிராக-தேச விரோத சக்தியாகச் செயல்படும் ‘பீட்டா’ அமைப்புக்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டுமென்ற கோரிக்கை பற்றி தமிழக அரசு எந்த முயற்சியும் இதுவரையில் எடுக்க வில்லை.

மாணவர்கள், இளைஞர்கள், பெற்றோர்கள், குழந்தைகள் என அத்தனை பேரும் வீதிக்கு வந்து போராடி இருக்கிறார்கள். அவசர சட்டம் பிறப்பித்ததை வரவேற்கிறேன். ஆனால் அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுடன் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு வார்த்தை நடத்தியிருக்க வேண்டும்.  இதை நான் பலமுறை  வலியுறுத்தி இருக்கிறேன்.
ஆனால் அவர் அதை மாணவர்களிடம் விளக்கி கூறி இருந்தால் இந்த அளவுக்கு பிரச்சினை வந்திருக்காது. அதைப்பற்றி கவலைப்படாமல் மாணவர்கள் இன்று 2 மணி நேரம் கால அவகாசம் கேட்டனர். ஆனால் அதைப்பற்றி கவலைப்படாமல் போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தியிருப்பது வேதனையாக உள்ளது.

பிரச்சினைகள் எழும் போதெல்லாம் அதற்கு பதில் அளிக்க முன்வராமல் அப்போது சம்பிரதாயத்துக்காக வாசிக்கப்படும் கவர்னர் உரையை புறக்கணித்து நாங்கள் வெளி நடப்பு- செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.