Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 9, 2017

ஜல்லிக்கட்டு.. மெரீனாவைக் கலக்கிய இளைஞர் படை.. அசந்து போன அன்புமணி!



சென்னை: ஜல்லிக்கட்டு எங்களது கலாச்சாரம், பாரம்பரியம். அதைக் காக்க நாங்கள் இருக்கிறோம் என்று இன்று மெரீனாவில் கூடி அதிர வைத்த இளைஞர் படையைப் பார்த்து சென்னையே வியந்து நிற்கிறது. பாமக இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸும் இந்த இளைஞர்களின் முயற்சியைப் பார்த்து பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை மெரீனா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்று பெரும் இளைஞர் படை சமூக வளைதளங்கள் மூலமாக ஒருங்கிணைந்து ஒன்று கூடி பேரணி நடத்திய பிரமிக்க வைத்து விட்டது.
மெரீனா பீச்சுக்கு வந்த அத்தனை பேரும் இந்தப் பேரணியை பார்த்து ஆச்சரியப்பட்டனர். பலர் அதில் கலந்து கொண்டு உற்சாகமூட்டினர்.
பாரம்பரிய உடையான வேட்டியுடன் பல இளைஞர்கள் நடை போட்டு கலக்கினர்.

அன்புமணி பெருமை பாராட்டு
இந்தப் பேரணி குறித்து பாமக இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் போட்டுள்ள டிவீட்டில், இளைஞர் படையைப் பார்த்து பெருமைப்படுகிறேன். தமிழர்களின் அடையாளமான ஜல்லிக்கட்டு காப்பாற்றப்படும் என்ற உணர்வு வருகிறது என்று மகிழ்ச்சியும், வாழ்த்தும் தெரிவித்துள்ளார் அன்புமணி.
ஏறு தழுவுதல் எங்கள் உரிமை
பேரணியில் பங்கேற்ற அருண் குமார் என்பவர் போட்டுள்ள டிவீட்டில், மெரீனா கடற்கரையில் இளைஞர்கள் பட்டாளம் படையெடுப்பு, #ஜல்லிக்கட்டு வேண்டி மாபெரும் ஆர்ப்பாட்டம், ஏறு தழுவுதல் எங்கள் உரிமை என்று குறிப்பிட்டுள்ளார்.
நேகாத வெல்லலாம்
விக்னேஷ் நல்லசாமி என்பவர் போட்ட பதிவு இது - நூறாக படை நூறாக தொட்ட இடமெல்லாம் தூளாக. நேராக வழி நேராக வெல்லலாம் தாறுமாறாக.
நாங்க நடத்துவோம்
விக்னேஷ் ராஜாராம் போட்ட டிவீட் இது. நாங்கள் நடத்துவோம். எங்களுக்குத் தேவை ஜல்லிக்கட்டு.
மெரீனாவுக்கு வந்து பாரு
கேலி செய்யும் பீட்டாவுக்கு மெரீனாவில் வைத்து பதிலடி இது என்று எந்திரப் புலவன் என்பவர் பெருமிதத்தோடு பதிலடி கொடுத்துள்ளார்.
அசர வைத்த மெரீனா
ஜாபர் என்பவர் மெரீனாவில் கூடிய இளைஞர் கூட்டத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டு போட்ட டிவீட் இது.
முடிஞ்சா தடுத்துப் பாரு
விக்கி என்பவர் போட்டுள்ள ட்வீட் இது

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.