Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 8, 2017

சசிகலா ஜாதி வெறியுடன் செயல்படுகிறார்! நாடார் சங்கம் கடும் எதிர்ப்பு!



அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை நாடார் சமூக அமைப்புகள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன.
இந்நிலையில் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய ஜெயலலிதா மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். என குறிப்பிட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதற்கு தமிழ்நாடு நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மதிய உணவு திட்டத்தை யார் கொண்டு வந்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை என்றும் காமராஜர் பெயரை இருட்டடிப்பு செய்வதற்காக சசிகலா வேண்டுமென்றி எம்.ஜி.ஆர். தான் கொண்டு வந்தார் என கடிதம் எழுதி இருப்பதாக அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதற்கு பிறகு அவருக்கு எதிராக எழுப்பப்படும் மிகப்பெரிய குற்றச்சாட்டு இது என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக பத்திரிக்கையாளர்கள் சந்திப்பிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.