Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 26, 2017

தங்கமகன் மரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது


தமிழ்நாட்டுக்கு கிடைத்த விருது: மாரியப்பன் பெருமிதம்
பாராலிம்பிக்கில்  தங்கம் வென்ற மாற்றுத்திறனாளி மாரியப்பனுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது  அறிவித்துள்ளது. இது தமிழ்நாட்டிற்கு கிடைத்த விருது என மாரியப்பன்  தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி  மாரியப்பன், ரியோவில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டும்  போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். அவருக்கு மத்திய  விளையாட்டு துறை ரூ.75 லட்சமும், தமிழக அரசு ரூ.2 கோடியும் வழங்கி கவுரவித்தன.  இந்நிலையில், அவருக்கு பத்ம விருது வழங்கப்படும் என மத்திய அரசு  அறிவித்துள்ளது.

தனக்கு விருது வழங்கப்பட்டதை அறிந்த மாரியப்பன், மிகுந்த  மகிழ்ச்சியடைந்துள்ளார். விருது குறித்து அவர் கூறுகையில், ‘’இந்த விருது  தமிழகத்திற்கு கிடைத்த விருது. மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இன்னும் புகழ்  வெளிச்சத்திற்கு வராத எத்தனையோ வீரர்களுக்கு இந்த விருது தன்னம்பிக்கையை  அளிக்கும்’’ என்றார். இதுகுறித்து அவரது பயிற்சியாளர் சத்யநாராயணா  கூறுகையில், ‘’மாரியப்பனுக்கு  பத்மஸ்ரீ  விருது கிடைத்தது மிகவும்  மகிழ்ச்சியாக உள்ளது. மாரியப்பன் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல தமிழக அரசு  பல்வேறு உதவிகள் செய்துள்ளது. இந்த விருது மாற்றுத்திறன் கொண்ட  அனைவருக்கும் இது மகிழ்ச்சியான தருணம்’’ என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.