Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 3, 2017

ஸ்டாலின் சகாப்தம் ஆரம்பம்: தலைவர் ஆகிறார் நாளை!?



ஒருவழியாக தமிழ் நாட்டில் தளபதி சகாப்தம் துவங்கப் போகிறது.இதுவரை கலைஞர் மட்டும்தான் தளபதிக்கு வழி விட மறுத்து வந்தார்.
பேராசிரியரும் தனது பொதுச்செயலாளர் பதவியில் விடாப்பிடியாக அமர்ந்து வந்தார்.  கலைஞர் இரண்டாம் முறையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொண்டை வழியாக மூச்சு விடும் வசதி பொருத்தப்பட்டது.
பேச்சுத்திறன் குறைந்து விட்டது என்கிறார்கள். ஞாபக மறதியும் கடுமையாக இருக்கிறது சொந்த பிள்ளைகளைக் கூட அடையாளம் தெரியாமல் இருக்கிறார்.
இந்த சூழலில் நாளை திமுகவின் பொதுக்குழு கூடுகிறது. கலைஞர் பேசுவாரா என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.
மூத்த மகள் செல்வி மூலமாக கலைஞரிடம் தளபதியின் தலைமைப் பொறுப்பைப் பேசி கிட்டத்தட்ட சம்மதம் வாங்கி விட்டார்கள்.
துரைமுருகன், எ.வ.வேலு, மா.சு. போன்றவர்கள் பேராசிரியரிடம் பேசி விட்டார்கள். இனி பொதுக்குழுவில் தளபதிக்கு மகுடம் சூட்டுவது மட்டுமே பாக்கி.
அதுவும் நாளை பொதுக்குழுவில் நடந்து விடும் என்று முடிவாகி விட்டது. அப்படி தளபதி தலைவர் ஆனால் தமிழ் நாட்டில் ஸ்டாலின் சகாப்தம் துவங்கும்.
தளபதியை எதிர்க்க ஜெ., போன்ற வலுவான தலைவர்கள் இல்லை என்பதால் மிக விரைவாக முதல்வர் நாற்காலியில் அமர்வார் என்கிறார்கள்.
இன்னும் இளைஞன் போலேவே பரபரவென்று இருக்கும் தளபதியின் ஆட்சியைக் காண மக்கள் தயாராக இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.