January 15, 2017
பெண்கள் சசிகலாவின் மீது வெறுப்பு! அறுவடை செய்ய திமுக ரகசிய திட்டம்!
தமிழகத்தில் பெண்கள் மத்தியில் சசிகலாவுக்கு எதிர்ப்பு அதிகரித்துள்ளது. இதனை அறுவடை செய்ய திமுக திட்டம் வகுத்து வருகிறது.
ஜெ., மரணத்தால் ஏற்பட்ட வெற்றிடத்தை பிடிக்க இப்படிப் பல கட்சிகளும் முயற்சிக்கின்றன. பழைய அரசியல் கணக்குகள் இப்போது பயனளிக்காது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். அ.தி.மு.க.வில் முதலமைச்சர் ஒ.பன்னீரும்சசிகலாவும் அ.தி.மு.க. வாக்குவங்கியை கைப்பற்றும் அசைவுகளை உணர்ந்தே இருக்கிறார்கள்.
விவசாயிகள் தற்கொலை என்றதும் மாநிலம் முழுக்க அமைச்சர்களை அனுப்பியதோடு, வறட்சி மாநில அறிவிப்பும் இந்த அசைவுகளை கணக்கில் கொண்டுதான் என்கிறார்கள்.
அதேநேரத்தில் அ.தி.மு.க. சற்றும் எதிர்பார்க்காத வகையில் இரட்டை இலைக்கு ஓட்டுப் போட்டு வந்த கட்சி சாராத பொதுமக்களை தன்வசப்படுத்த தி.மு.க. முயற்சிகளை எடுக்கிறது.
ஜெ.,வின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தியது, ஜெ.வின் மரணத்தில் உள்ள மர்மங்களை விளக்க வேண்டுமென கேள்வி கேட்டது,
ஜல்லிக்கட்டு, விவசாயிகள் தற்கொலை, பொங்கல் விடுமுறை என தமிழகத்தை உலுக்கும் ஒவ்வொரு பிரச்சினையிலும் விரைவாக அறிக்கை விடுவது என ஸ்டாலின் செயல் தலைவர் ஆனதும் தி.மு.க.வின் வேகம் அதிகரித்துள்ளது என அ.தி.மு.க.வினரே ஒத்துக்கொள்கிறார்கள்.
“சசிகலாவின் புதிய தலைமையை அ.தி.மு.க.வின் வாக்குவங்கியான பெண்கள் முற்றிலுமாக நிராகரிக்கிறார்கள்.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 171 தொகுதிகளில் பெண்கள்தான் அந்தத் தொகுதியின் முடிவைத் தீர்மானிக்கிறார்கள்.
அவர்களது மனங்களை வெல்ல ஸ்டாலின் முயற்சிக்கிறார்” என அறிவாலயம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது
பெண்கள் சசிகலாவின் மீது வெறுப்பு! அறுவடை செய்ய திமுக ரகசிய திட்டம்!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 15, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 15, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.