Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 5, 2017

எம்ஜிஆருக்கு சின்னம்மா இருந்ததை பண்ருட்டியார் இப்பதான் சொல்றாரு- பேச்சாளர் ஜெயவேல் பொளேர்



சென்னை: சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக முதன்மை பேச்சாளர்களில் ஒருவரான சிதம்பரம் ஜெயவேல் அக்கட்சியில் இருந்து வெளியேறியுள்ளார். அத்துடன் எம்ஜிஆருக்கு ஒரு சின்னம்மா இருக்கிறார் என்பதை தற்போதுதான் பண்ருட்டியார் சொல்லித்தான் தமக்கு தெரியும் எனவும் அவர் கிண்டலடித்துள்ளார்.
இது தொடர்பாக சிதம்பரம் கோ. ஜெயவேல் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஜெயலலிதாவால் 5 ஆண்டுகள் கட்சியைவிட்டு நீக்கி பின் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து கட்சியில் இணைந்த சசிகலாவை பதவியில் இருப்போர், தங்கள் சொத்துக்களை பாதுகாத்துக் கொள்ள ஆதரிக்கலாம். கழகத்தின் அடிமட்ட தொண்டன் சசிகலாவை தலைவியாக ஏற்றுக்கொள்ள மாட்டான்.
எம்ஜிஆர் இரட்டைஇலை சின்னத்தை மட்டும் விட்டுவிட்டு செல்லவில்லை, சின்னம்மாவையும் விட்டுச்சென்றார் என்றார் பண்ருட்டியார். எம்ஜிஆருக்கு ஒரு சின்னம்மா இருப்பதை பண்ருட்டி ராமச்சந்திரன் கூறித்தான் தெரிந்து கொண்டோம்.
ஜெயலலிதாவின் இரு கால்களையும் வெட்டி எடுத்துவிட்டு புரட்சிதலைவி நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார்; தொண்டையில் துளை போட்டு விட்டு வீட்டில் இருந்து கொண்டு வந்த கிச்சடி சாப்பிட்டார் என அறிக்கைகள் வெளியிட்டனர். எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்ட கட்சி சசிகலா போன்றோர் கையில் சென்றது குரங்கு கையில் பூமாலை சிக்கியதாகிவிடும்.
ஆகையால் கட்சியின் பேச்சாளர் பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயவேல் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.