Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 31, 2017

வேலைக்காரி சசிகலா தான் ஜெயலலிதாவை கொன்றார் – முன்னாள் எம்.எல்.ஏ பரபரப்பு பேட்டி


தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் சசிகலா அதிமுக பொதுச் செயலாளர் பதவியை ஏற்றுக் கொண்டார்.

ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருந்த பலர் மற்றும் அதிமுகவில் உள்ள அடிமட்ட  தொண்டர்கள் ஆகியோருக்கு இது பிடிக்கவில்லை.இவர்களில் பலர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தான் அதிமுகவின் உண்மையான வாரிசு என கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே அதிமுகவில் இருக்கும் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியான முன்னாள் எம்.எல்.ஏ மலரவன் , ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் ஜெ. தீபா பேரவை ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் பேசிய அவர், சசிகலா அதிமுக-வின் பொது செயலாளராக பெறுப்பேற்றது திட்டமிட்ட சதி என்று கூறினார்.

மேலும், வேலைக்காரி சசிகலா தான் ஜெயலலிதாவை கொலை செய்து , நான் தான் பொதுச் செயலாளர் என்று சொன்னால் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என காட்டமாக பேசினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.