Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 17, 2017

கல்லூரி மாணவர்கள் சபதம்.. அரசியலில் புரட்சி ஏற்படுத்துவோம்.. தேர்தலில் இளைஞர்கள் களம் இறங்குவார்கள்



ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி அலங்காநல்லூரில் கடந்த 2 நாட்களாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இன்று காலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
கைது படலத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரம்  அடைந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது.
இந்த போராட்டத்தில் கல்லூரி மாணவர்களே அதிக அளவில் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளனர். அப்போது அவர்கள் கூறும்போது, ஜல்லிக்கட்டிற்கு அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் எங்கள் போராட்டம் அடுத்து கட்டத்தை நோக்கி பயணிக்கும்.
முதல் கட்டமாக குடியரசு தினத்தில் தேசிய கொடியை அரை கம்பத்தில் பறக்க விடுவோம். கருப்பு கொடி ஏற்றுவோம். முக்கியமாக எந்த கட்சிக்கும் ஓட்டு போட மாட்டோம். இளைஞர்கள் தேர்தலில் நிற்பார்கள். அவர்களுக்குதான் நாங்கள் வாக்களிப்போம். அரசியலில் புரட்சி ஏற்படுத்துவோம் என்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.